பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

diathesis

384

diet,saltfree


உட்பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்பமூட்டுதல் மின்னோட்ட இயக்கத்தின் மூலம் பொருள்களின் உட்பகுதிகளுக்கு வெப்பமூட்டுதல் உள்ளுறுப்புகளின் வீக்கத்தைக் குறைக்க இது பயன்படுத்தப்படுகிறது.

diathesis : நோய்த்தன்மை; வற்றுவாய்; நோய்ப் பாங்கு : பரம்பரை நோயை உருவாக்கும் தன்மையுள்ள ஒரு நிலைமை.

diatrozoic acid : டயடிரோஜாக் அமிலம் : சிறுநீரக வரைபடம் மற்றும் தசை வரைபடங்கள். எடுப்பதற்குப் பயன்படும் ஓர் ஊடகம். இதில் சோடியம், மெக்ளுமின் உப்புகள் கலந்துள்ளன. தண்ணிரில் கரையக்கூடிய தன்மையுடையது.

diazemuls : டயாசிமல்ஸ் : குழம்பு வடிவிலுள்ள டயாசிப்பாம் என்ற பொருளின் வணிகப் பெயர்.

diazepam : டயாசிப்பாம் : இயக்கு தசை இறுக்கத்தைத் தளர்த்தக் கூடிய மயக்க மருந்து. காக்காய் வலிப்பு நோயின்போது ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.

diazoxide : டயஜோக்சைடு : உக்கிர இரத்த அழுத்தச்சிக்கலின்போது சிரை வழியாகத் தரப்படும் இரத்த அழுத்தக் குறைப்பி மருந்து. இது இரத்த நாளங்களை நேரடியாக அடைந்து அவற்றை விரிக்கும்.

diconal : டைக்கோனால் : டைபைப் பானேன் ஹைட்ராகுளோரைடு, சைக்ளினின் இரண்டும் கலந்த தயாரிப்புப் பொருளின் வணிகப் பெயர்.

dicophane : டைக்கோஃபேன் : ராடைஃபீனைல்ட்ரை குளோரோஈதேன் (DDT) என்ற புகழ்பெற்ற பூச்சிக்கொல்லி மருந்து. ஒட்டுண்ணிகளை நீக்குவதற்கும் பயன்படுத்தப் படுகிறது.

dicyclomine : டைசைக்ளோமின் : முறுகுதசை வேதனையை நீக்கு வதற்குக் கொடுக்கப்படும் மருந்து.

Dicynene : டைசினீன் : எத்தாம் சிலேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

dientamoeba : இரட்டை அமீபா உயிரி : ஒன்றுபோல் காணப்படும் இரண்டு உயிரணுக்கருக்கள் கொண்ட அமீபா நுண்ணுயிரி.

diet : குறிப்பிடப்பட்ட உணவு; சீருணவு; உணவு : அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ள சீருணவு.

dietary : உணவுப் பட்டியல்.

dietic : உணவு சார்ந்த.

dietical : பத்திய உணவு சார்ந்த.

diet, balanced : தக ணவு; சமவிகித உணவு.

diet mixed : கலப்புணவு.

diet, saltfree : உப்பிலா உணவு.