பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dietary fibre

385

diflunisal


dietary fibre : உணவு இழைமம் : காய்கறி இழைமங்களைக் கொண்ட உணவு. இது முக்கியமாக இழைமங்களைக் கொண்டது. மலச்சிக்கல், உடல் பருமன், நீரிழிவு, இரைப்பைப் புற்று போன்ற நோய்களை இது தடுக்கக்கூடியது.

dietetics : உணவு விதிமுறை; உணவூட்டவியல்; பத்தியநெறி : உடல் நலத்துக்கும் நோய்ச் சிகிச்சைக்கும் ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்துதல்.

diethazin : டையத்தாசின் : பார்க்கின்சன் நோய்க்கு எதிராக கொடுக்கப்படும் செயற்கை மருந்து.

diethylcarbamazine : டையெத்தில்கார்பாமாசின் : யானைக்கால் நோய்க்கு எதிராக வாய்வழி உட் கொள்ளப்படும் மருந்து.

diethylpropion hydrochoride : டையெத்தில்புரோப்பியான் ஹைட்ரோகுளோரைடு : மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டக் கூடிய ஒருவகை மருந்து. இது பசியையும் குறைக்கக்கூடியது.

diethyl stilboestrol : டையெத்தில் ஸ்டில்போயஸ்டிரால் : இறுதி மாதவிடாய். மாதவிடாய்க் கோளாறு, பெண் இனப்பெருக்க உறுப்புகளில் வீக்கம், மார்பகப்புற்று, பெருஞ்சுரப்பிப்புற்று ஆகியவற்றைக் குணப்படுத்தக் கூடிய மருந்து.

dietitian : உணவு முறை வல்லுநர்; பத்திய நெறியாளர் : பள்ளிகள், மருத்துவமனைகள், உணவகங்கள், உணவுப்பொருள் தொழிற் சாலைகள் ஆகியவற்றில் உடல் நலத்தைச் சீராக வைத்துக் கொள்வதற்கான உணவுமுறைகள் குறித்து ஆலோசனை கூறுவதற்கு உள்ள வல்லுநர்.

Dieti's crisis : டியட்டில் கோளாறு : அடிக்கடி சிறுநீர்ப்போக்கு ஏற்படும்போது உண்டாகும் வலி, அதிக அளவில் நீர் அருந்துவதால் குறைதல். போலந்து மருத்துவ அறிஞர் ஜோசப் டியட்டில் பெயரால் அழைக்கப் படுகிறது.

difficulty : இன்னல்; இடர்.

diffusion : விரவிப் பரவுதல்; செரித்தல்; விரவுதல் : வெவ்வேறு செறிவுகளுள்ள வாயுக்களையும், திரவங்களையும் ஒன்றாகக் கலக்கும்போது, அவை சம அளவுக்கு வரும் வரை தானாக விரலில் பரவும் முறை.

diflunisal : டிஃப்ளுனிசால் : வீக்கத்தைக் குறைக்கும் மருந்து. சாலிசிக் அமில (டோலோபிடி) லிருந்து எடுக்கப்படுகிறது.