பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

diodone

389

diphenoxylate


சக்கினேட் : மலச்சிக்கலைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் மருந்து. இதனை ஒழுங்காகப் பயன்படுத்தி வரவேண்டும்.

diodone : டையோடோன் : ஊடுகதிர் (எக்ஸ்-ரே) ஒப்பீட்டுப் பொருளாகப் பயன்படுத்தப்படும் கரிம அயோடின் கூட்டுப் பொருள்.

Diodoquin : டையோடோக்கின் : டை அயோடோ ஹைட்ராக்சி குவினோலோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

diomosil : டயோனோசில் : மூச்சுக் குழாய் வரை படம் எடுக்கும் போது அல்லது சீழ்த்தேக்கக் குழியின் கீழ் வரம்பினை நிருணயிப்பதற்குப் பயன்படுத்தப் படும் ஒர் ஒப்பீட்டு ஊடகம்.

diopter : டயோப்டெர் : கண்ணாடி வில்லையின் குவியத் தொலைவுக்கேற்ற கோட்ட அளவின் அலகு (d).

dioptometer : டயோப்டோமானி : கண்ணின் கதிர்க்கோட்டத்தையும், கண் சீரமைவுத் திறனையும் அளவிடுவதற்கான ஒரு கருவி.

dioptre : ஒளிக்கோட்ட அலகு : கண்ணாடி வில்லையின் குவியத் தொலைவுக் கோட்ட அளவுக் கூறு. ஒரு ஒளிக்கோட்ட அலகு கொண்ட ஒரு கண்ணாடி வில்லையின் குவியத் தொலைவு 1 மீட்டர்.

dioptrics : ஒளிக்கோட்டவியல் : ஒளிக்கோட்டம் பற்றிய ஆய்வியல்.

diovulator : இரட்டைச்சூல் முட்டை உருவாக்கம் : ஒரே கரு உயிரணுச்சுழற்சியில் இரண்டு கரு உயிரணுக்களை உருவாக்குதல்.

dioxide : டயாக்சைடு : ஒவ்வொரு மூலக்கூற்றிலும் இரண்டு ஆக்சிஜன் அணுக்களைக்கொண்ட ஆக்சைடு.

Diparcol : டைப்பார்க்கோல் : டையெத்தாசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

dipeptide : டைபெப்டைடு : புரதத்தை நீரால் பகுப்பதால் கிடைக்கும் ஒரு புரதம்.

dipeptidase : டைபெப்டிடேஸ் : டைபெப்டைடுகளை நீரால் பகுப்பதை வினையூக்கம் செய்து அமினோ அமிலங்களாக மாற்றும் ஒரு செரிமானப் பொருள்.

diphenhydramine : டைஃபென்ஹைட்ராமின் : ஹிஸ்டாமின் எதிர்ப்பு மருந்துகளில் ஒன்று. ஒவ்வாமை, பயண நோய் போன்ற நிலைமைகளில் பயன் படுத்தப்படுகிறது. இஃது உறக்க முட்டும், வாந்தியைக் கட்டுப் படுத்தும்.

diphenoxylate : டைஃபெனாக்சிலேட் : கடுமையான வயிற்றுப் போக்கை நிறுத்தக் கொடுக்கப்