பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

drastic

400

drops


drastic : முனைப்பு தீவிகம்; பெரு மாற்றம்; கடும் பேதி மருந்து.

drawght : வீச்சு; வளிவேகம்.

dream : கனவு : உறங்கும்போது எண்ணங்களும், உணர்வுகளும் தோன்றுதல். துரிதமான கண் அசைவு உறக்கத்தின்போது கனவுக் காட்சிகள் தோன்றுகின்றன.

dresser : அறுவைத் துணைவர் : அறுவை மருத்துவத்தின்போது மருத்துவருக்கு உதவும் துணைவர்; காயங்களுக்குக் கட்டுப்போட உதவும் மருத்துவ மாணவர்.

dressing : காயக்கட்டு; கட்டு : வெளிநோய் தொற்றாமல் காயங்களுக்கு அல்லது புண்களுக்குக் கட்டுப்போடுதல்.

Dressler's syndrome : டிரஸ்லர் நோய் : நெஞ்சுத்தசையழிவுக்கு பிந்திய நோய். இதனால், இடைவிடாத காய்ச்சல், குலையுறை அழற்சி, நுரையீரல் உறையழற்சி ஆகியவை உண்டாகும். இவை, தன்னியல்பான நோய்த் தடுப்பினால் உண்டாகலாம். இது, அமெரிக்க மருத்துவ அறிஞர் வில்லியம் டிரஸ்லர் பெயரால் அழைக்கப்படுகிறது.

drill : துளையிடுதல்.

drip : சொட்டு : சொட்டு சொட்டாக விழுதல்.

Droleptan : டிரோலெப்டான் : டிரோம்பெரிடால் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

dromoran : டிரோமோரான் : லெவோர்ஃபானால் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

drop : துளி; திவளை : 1. ஒரு திரவத்தின் கோள வடிவ நுண்துளி. 2. ஒர் உறுப்பு தனது இயல்பான இயக்கத்திலிருந்து வீழ்ச்சியடைதல்.

drop attacks : நிலைதடுமாற்றம் : உடலின் கீழ்ப்பகுதி உறுப்புகள் திடீரென நிலையிழப்பதால் அவ்வப்போது நிலை தடுமாறி விழுதல்.

droperidol : டிராப்பெரிடால் : நரம்புத் தளர்ச்சியைப்போக்கும் மருந்து. அறுவைச் சிகிச்சைக்கு முந்திக் கொடுக்கப்படும் மருந்தாகப் பயன்படுகிறது. சுவாச மண்டலத்தைப் பாதிக்காமல், நினைவிழப்பு ஏற்படாமல், ஒரு பற்றற்ற மனநிலையை இது உண்டாக்குகிறது.

droplet : சிறுதுளி; துளிச்சொட்டு: 1. மிகச்சிறிய துளி. 2. ஒரு நுண் ணுயிரி மீது படையெடுத்துத் தாக்கும் நோய். இது துகள்களினால் பரவுகிறது.

dropper : துளி முனைக்குழாய்; சொட்டுவான் : திரவத்துளிகளை வெளியேற்றுவதற்குப் பயன்படும் ஒரு பக்கம் குறுகிய முனையுடைய ஒரு குழாய்.

drops : சொட்டு மருந்து : துளி மருந்து.