பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Duffy system

402

duodenal ulcer


நேரடியாகக் குருதிக்குள் கசிவு நீர் பரப்பும் சுரப்பிகள்.

Duffy system : டஃபி குருதிக் குழுமம் : இரண்டு காப்பு மூலங்கள் அடங்கிய ஒரு இரத்தக்குழுமம். இது இணை இனக்கீற்று மரபணுக்கள் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.

Dugas test : டுகாஸ் சோதனை : பொதுவாக உடம்பின் நடுப்பகுதிப் பக்கமாகவுள்ள முழங்கையினால் எதிர்ப்பக்கமுள்ள தோளைக் கையினால் தொட முடியும். தோல் பிறழ்ந்த ஒரு நோயாளி, இவ்விதம் எதிர்ப்புறத் தோளைத் தொட இயலாது. இதைக் கண்டறிவதற்கான சோதனை இது. அமெரிக்க மருத்துவ அறிஞர் லூயி டுகாஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

duke's test : டியூக் சோதனை : இச்சோதனையில் தோலில் குத்தி, உறிஞ்சு காகிதத்தினால், இரத்தம் பாய்வது நிற்கும் வரையில் இரத்தம் தொடர்ச்சியாக எடுக்கப்படுகிறது. இரத்தம் கசிவதற்கான இயல்பான நேரம் 3-5 நிமிடம்.

Dulcolax : டல்கோலாக்ஸ் : பிஸ்கோடில் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

dul : மந்த.

dullard : மூடன்; மந்தன்.

dulness; மந்தம்; குறையொலி : சீதசன்னி, கழலைக்கட்டி, நுரை யீரல் கசிவு, நுரையீரல் கெட்டியாதல், திசு விரிவாக்கம் உண்டாக்கும் நோய்.

dumping : திணிப்பு; பொதித்தல்.

Duncan mechanism : டங்கன் செயல்முறை : பனிக்குடம் உடையும் போது குழந்தை வயிற்றிலிருந்து பிரிந்து வருவது கீழ் முனையிலிருந்து தொடங்குகிறது. உறுப்பு முழுவதுமே கருப்பை வாய்க்குள் திணிக்கப் படுகிறது. கடைசியாக மேல்முனை கருப்பைக் குழியிலிருந்து வெளிவருகிறது. இந்தச் செயல் முறையை பிரிட்டிஷ் பெண் பாலுறுப்பியலறிஞர் ஜேம்ஸ் டங்கள் விவரித்தார். அவர் பெயரால் இந்தச் செயல்முறை அழைக்கப்படுகிறது.

duodenal : முன்சிறுகுடல் சார்ந்த : முன்சிறுகுடல் தொடர்புடைய.

duodemum : முன்குடல்.

duodenai ulcer : முன்சிறுகுடல் புண் : அமிலம், பெப்சின் ஆகிய வற்றின் வினை காரணமாக முன் சிறுகுடல் கவரில் ஏற்படும் சீழ்ப்புண். இதனால், உணவு உண்டபின் கடுமையான வலி ஏற்படுகிறது. இந்த வலி பல மணி நேரம் நீடிக்கும். எனவே இதனைப் பசிவலி என்றும் கூறுவர். வலி ஏற்படும்போது உணவு உண்டால் வலி குறைகிறது. இந்தப்புண் காரணமாக இரத்தக்கசிவு உண்டாகி, மலத்துடன் இரத்தம் போகும்.