பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



E

Eale's disease : ஈலே நோய் : விழித்திரையினுள்ளும், விழி நீர்மத்திலும் அடிக்கடி ஏற்படும் குருதிப்போக்கு ஆண்களிடம், இரண்டாம், மூன்றாம் பத்தாண்டுகளில் இது உண்டாகிறது, பிரிட்டிஷ் கண் மருத்துவ வல்லுநர் ஹென்றி ஈலேஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

e-antigen : இ-காப்பு மூலம் : கல்லீரலழற்சி உண்டாகும் "ஹேப்பாட்டிட்டிஸ்-B" எனப்படும் "இ-ஆன்டிஜன்" என்ற காப்பு மூலம்.

ear : காது; செவி : கேட்க உதவும் உறுப்பான இஃது ஐம் புலன்களுள் ஒன்றாகும். ஒலி அலைகளை வாங்கி உணரச் செய்யும் இவ்வுறுப்பு புறச்செவி, நடுச்செவி, உட் செவியாகிய மூன்று பகுதிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.

ear-ache : காதுவலி.

ear-drum : செவிப்பறை.

earlap : காது நுனி.

earless : காதில்லா புறச் செவியற்ற.

earphone : காது ஒட்டி பேசு கருவி : தொலைபேசியில் செவியுடன் பொருந்த வைத்து ஒலிவாங்கு கருவி.

early gene : ஆதி உயிரணு : ஓர் ஊட்டுயிர் மரபியல் உயிர்மத்தினுள்ள ஒரு நோய்க் கிருமி.