பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

emasculatien

419

embryo


emasculation : காயடித்தல்; ஆண்மை நீக்கம்; ஆண்மை அகற்றல் : விதையடித்து ஆண்மை அகற்றுதல்.

embedding : பதித்துவைத்தல் : ஒரு திசுத்துணுக்கு கன் மெழுகில் பதிக்கப்படுகிற செய்முறை. திகவினை நுண்ணோக்காடி மூலம் ஆய்வு செய்வதற்காக மெல்லிய பிரிவாக வெட்டுவதற்கு இது பயன்படுகிறது.

embolectomy : குருதிக் குமிழ் அறுவை மருத்துவம்; குருதிக் கட்டி நீக்கம் :அறுவைச் சிகிச்சை மூலம் குருதிக் குழாயிலுள்ள காற்றுக் குமிழை அகற்றுதல். பொதுவாக ஒரு நுண்ணிய குழலை உட்செலுத்தி இது செயற்படுகிறது.

embolisation therapy : குருதிக் குழாயடைப்புச் சிகிச்சை : தெரிந் தெடுத்த தமனிக் குழாய்ச் செருகியைச் செலுத்திச் சிகிச்சை செய்தல். இது இரத்தக் கசிவுப் புள்ளிகள், புண்புரை, இரத்த நாளக்கட்டி ஆகியவற்றைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.

embolism : குருதிக்குழாயடைப்பு; குருதி உறைக்கட்டி அடைப்பு : அடை மிதவை பக்கவாதத்துக்குரிய நிலையில் குருதிக் குழாய்களில் குருதிக்கட்டி வழியடைத்தல்.

embolus : குருதிக்குமிழ்; உள்ளெறிகை; தக்கை : குருதியோட்டத்தில் திண்மப்பொருள் அல்லது காற்றுக் குமிழ்.

embolysis : குருதிக் காற்றுக் குமிழ் சிகிச்சை : ஒரு குருதிக் காற்றுக் குமிழை-முக்கியமாக குருதிக்கட்டியை-உடைத்தல்.

embrocate : பூசு மருந்து : மருந்து நீர் பூசித்தேய்த்தல்; மருந்து நீர்மத்தால் கழுவுதல்.

embrocation : தடவு மருந்து : நோயுற்ற உறுப்பின் மீது பூசித் தேய்ப்பதற்குப் பயன்படும் நீர்மம்.

embryo : கருமுனை; கரு; முட்டைக் கரு உயிர்; முளையம் : கருவுற்ற தொடக்க மாதங்களில் உருவாகும் முதிர்வுறாக் கருவுயிரை குறிக்கும் சொல்