பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ergotrate

437

erythrocytopenia


ergotrate : எர்கோட்ரேட் : எர்கோமெட்ரைன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

eruption : பொக்குளம்; தோல் கொப்புளம் : திடீர் வெடிப்பு, பரு. பல் வகையில் ஈற்றினை ஊடுருவி ஏற்படும் வெடிப்பு.

Erysichthon syndrome : எரிசிக்தோன் நோய்; குண்டோதரப் பசி : அளவுக்குமீறிய இதயத்துடிப்பு, அடங்காத பசி, கண்ட உணவுகளை உண்ணும் வேட்கை ஆகியவை உண்டாகும் ஒரு நிலைமை. கிரேக்கப் புராணத்தில் வரும் குண்டோதரன் தீராப் பசியுடைய ஒரு கதாப்பாத்திரத் தின் பெயரால் இந்த நோய் அழைக்கப்படுகிறது.

erysipelas : அக்கி; செஞ்சருமம் : உடல் மீது திண்சிவப்பு நிறம் படரும் நோய் வகை. இதனால் காய்ச்சலும், செரிமானக் கோளாறுகளும் உண்டாகும்.

erythema : தோல்தடிப்பு நோய்; செந்தடிப்பு : தோல் மீது சிவப்பு நிறத்தில் பட்டை பட்டையாகத் தடிப்பு விழும்நோய்.

erythralgia : தோல் சிவப்புநோய் : தோலில் வலியும், சிவப்பு நிறமும் ஏற்படும் ஒரு நிலை.

erythroblast : எலும்பு மச்சைச் சிவப்பணு; குருத்துச் சிவப்பணு : சிவப்பு எலும்பு மச்சையில் (எலும்புச் சோறு) காணப்படும் கருமைய இரத்தச் சிவப்பணு. இதிலிருந்து சிவப்பு அணுக்கள் உண்டாகின்றன.

Erythrocin : எரித்ரோசின் : எரித்ரோமைசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

erythroblast: முதிராசிவப்பணு : முதிராநிலையிலுள்ள இரத்தச் சிவப்பணு. கருமையமுடைய சிவப்பணு.

erythroblastaemic : முதிராசிவப்பணு மிகுதி : கருமையமுடைய முதிராச் சிவப்பு அணுக்கள் அளவுக்கு அதிகமாக இருத்தல்.

erythroblastoma : சிவப்பணுக் கட்டி : கருமையமுடைய முதிராச் சிவப்பணுக்கள் அடங்கிய ஒரு கட்டி.

erythrocytes : சிவப்பணுக்கள்; செவ்வணுக்கள் : இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள்.

erythrocythaemia : சிவப்பணு மிகை உற்பத்தி; சிவப்பணு மிகுதல் : இரத்தத்தில் சிவப்பணுக்கள் அளவுக்கு மிகுதியாக உற்பத்தியாதல், இது அதிக உயரங்களில், வாயுமண்டலத்தில் ஆக்சிஜன் குறைபாட்டினாலும், திசுக்களும் அதிக ஆக்சிஜன் செல்ல வேண்டிய தேவையினாலும் உண்டாகிறது.

erythrocytopenia : சிவப்பணு குறைபாடு : இரத்தத்தில் சிவப் பணுக்கள் எண்ணிக்கை அளவுக்குக் குறைவாக இருத்தல்.