பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Erb's paisy

436

ergotism


Erb's palsy : எர்ப் முடக்குவாதம் : தோள், புயம் ஆகியவற்றின் தசைகளில் ஏற்படும் பக்க வாதம். ஐந்தாவது ஆறாவது கழுத்து நரம்பு வேர்களில் உண்டாகும் புண் காரணமாக இது ஏற்படுகிறது. இதனால் புயம் செயலிழந்து தொங்கும். பெரும்பாலும் பிறவியிலேயே ஏற்படும் காயத்தினால் இது உண்டாகிறது.

Erb's paralysis : எர்ப் முடக்கு வாதம் : தோள், கைத்தசைக் குழுமத்தில் ஏற்படும் முடக்கு வாதம். ஐந்தாவது, ஆறாவது முதுகுத்தண்டு நரம்புகளின் கழுத்து வேர்ப்பகுதிகளில் இது உண்டாகிறது. ஜெர்மன் நரம்பி யலறிஞர் வில்ஹெல்ம் எர்ப் பெயரால் அழைக்கப்படுகிறது.

erectile : நிமிர்த்தக்கூடிய; விரைக்கக்கூடிய; விரைக்கும் : விறைப் பாக்கி எழுப்பக் கூடிய திக.

erectile tissue : விறைப்புத் திசு : விறைத்து நிமிர்ந்து நிற்கும் திறனுடைய பஞ்சு போன்ற திசு தூண்டுதல் காரணமாக இரத்தம் நிறையும்போது இது விறைத்து, நிமிர்ந்து நிற்கிறது.

erector : நிமிர்க்கும் தசை; நிமிர்த்தி; தூக்கி; விறைப்பி : விறைப்பாக்கி எழுப்பக்கூடிய தசை.

erepsin : எரெப்சின் :சிறு குடலிலுள்ள செரிமானப் பொருள்களின் ஒரு குழுமம். இது ஒரளவு சீரணமான புரதங்களை நீரால் பகுப்பதை ஊக்குவிக்கிறது.

ergograph : தசை இயக்க அளவுமானி : தசை சுருங்கும் போது ஏற்படும் உழைப்பின் அளவினைப் பதிவு செய்யும் ஒரு கருவி.

ergometry : தசைத் திறன் மானி; தசைப் பணி அளவியல் : தசை களின் செயற்பணித் திறனை அளவிடும் கருவி.

ergosterol : எர்கோஸ்டெரால் : மனிதரிடமும் விலங்குகளிடமும் தோலடியில் இருக்கும் வைட்டமின் ஆதரவுப் பொருள். இது ஒளிபடும்போது வைட்ட மின் D2 ஆக மாற்றப்படுகிறது. இது கனைச் சூட்டினைத் தடுக்கும் இயல்புடையது.

ergot : கூல நோய்; சோளக்காளான் : காளான் வகையால் ஏற்படும் கூலநோய் மருந்தாகப் பயன்படும் நோயுற்ற கம்புக்கூல விதை.

ergotamine : எர்கோட்டாமின் : கம்புக்கூல விதையின் வெடியக் கலப்புடைய 'அல்கலாய்ட்' வகை வேதியியல் மூலப்பொருள். இது கடுமையான ஒற்றைத் தலைவலிக்குப் பயன்படுகிறது.

ergotism : ரொட்டி நோய் : ஊசிப் போன தானிய மாவினால் செய்யப்பட்ட ரொட்டியினால் உண்டாகும் நோய்.