பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fauces

456

fehling's solution


fauces : பின்வாய்ப்புழை; தொண்டை வாயில்; மிடற்று வாய் : வாயின் பின்பக்கப் புழை.

favism : கடும் இரத்தச் சோகை : இரத்தச் சிவப்பணுக்களில் G6PD (குளுக்கோள் 6 ஃபாஸ்பேட் டிஹைட்ரோஜினேஸ்) என்ற செரிமானப் பொருள் குறைவாக இருத்தல். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடுமையான குருதிச் சோகை உண்டாகிறது.

favus : படர்தாமரை : ஒருவகைப் படர்தாமரை நோய். இதனால் முக்கியமாகத் தரையுச்சி வட்டத்தின் மஞ்சள் நிறமான குவளை வடிவான பொருக்கு உண்டாகிறது.

fear : அச்சம்; பயம் : மேல்வரு நிலைகள் பற்றி மன உலைவு கொண்டு கவலையும் கலக்கமும் அடைதல், பயந்து நடுங்குதல்.

febrifuge : காய்ச்சல் போக்கி.

febrile : காய்ச்சல்; சுரம் : பெரும்பாலும் 6 மாதம் முதல் 5 வயது டைய குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல். இதனால உடல் வெப்ப நிலை அதிகரிப்பதுடன் நடுக்கமும் ஏற்படும்.

fecundation : கருவுறல் சினையாதல் : கருவுறுதல்; குழந்தை பெறுதல்.

fecundity : இனப்பெருக்க வளம்; குட்டி ஈனும் திறன்; கருவுறு திறன் : இனப்பெருக்கம் செய்வதற்கான திறம்.

feeble-minded : மன உறுதியற்ற; மனவலிவற்ற : மனக்கோளாறு உடையவர். இவர் மிக எளிய நடவடிக்கைகளைச் செய்ய முடியும். ஆனால், இவருக்கு மிகுந்த கவனிப்பு தேவை.

feed : ஊட்டல், ஊட்டுகை.

feeding : ஊட்டுதல்.

feeding-bottle : குழந்தை பால்புட்டி.

feedback : பின்னூட்டம் : தகவல்களைத் திரும்பப் பெறுதல். ஒர் உட்பாட்டில் அல்லது தூண்டுதல் ஒரு முறையினைப் பயன் படுத்துவதால் உண்டாகும் வெளிப்பாட்டினை அல்லது விளைவினை அறிந்து கொள் ளுதல்.

feeder : ஊட்டுநர்.

feeling : உணர்வு; உணர்தல் : நரம்பு நடவடிக்கையின் நனவு நிலை.

feat : கால்கள்.

fehling's solution : ஃபெஹ்லிங் கரைசல் : தாமிர சல்ஃபேட், பொட்டாசியம் சோடியம் டார்ட்ரேட், சோடியம் ஹைடிராக்சைடு ஆகியவை அடங்கிய ஒரு கரைசல் சிறுநீரில் சர்க்கரை இருப்பதை அறியப் பயன்படுத் தப்படுகிறது. ஜெர்மன் வேதியியலறிஞர் ஹெர்மன் ஃபெஹ்லிங் பெயரால் அழைக்கப்படுகிறது.