பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fulguration

478

fungiform


fulguration : திசுவழிப்பு; மின்வழி திசு வலிப்பு : உட்பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்ப மூட்டுதல் மூலம் திசுக்களை அழித்தல்.

fultem : நிறைமாதம் வளர்வுற்ற கரு : குழந்தை கருப்பையில் 40 வாரங்கள் முழுவதுமாக இருந்து முதிர்ச்சியடைதல்.

fulminant : திடீர்த் தோற்றம் : திடீரெனத் தோன்றி, அதே வேகத்தில் மறைதல், அதிரடித் தாக்கம்.

fulminating : அதிமிகை.

fumigation : புகைத் தூய்மையாக்கம்; புகையூட்டத் தூய்மை; புகையூட்டும் : நறுமணப் புகையூட்டித் தூய்மையாக்கம் செய்தல்.

function : உறுப்புப் பணி; இயக்கம்; செயல் : இயல்பான நிலையில் உடலின் ஒவ்வொரு உறுப்பும் செய்யக் கூடிய தனிப் பணி.

function coordinating : ஒருங்கிணை செயல்.

functional : உறுப்பியக்க முறை : உடல் உறுப்புகளின் இயக்கக் கூறு சார்ந்த உறுப்புகளின் கட்டமைப்பு சீர்குலையாமல், இயக்கத்தில் கோளாறு ஏற்படுதல்.

fundal dominance : கருப்பை உச்சி ஆதிக்கம் : கருப்பை உச்சிப் பரப்பில் கருப்பைச் சுருக்கம் இயல்பாகத் தொடங்குதல்.

fundoplication : இரைப்பை வாய் மடிப்பு : இரைப்பை உச்சிப் பரப்பினை அறுவை மருத்துவம் மூலம் மடித்து விடுதல், இரைப் பையிலுள்ள பொருள்கள் உணவுக் குழாய்க்குள் சென்று விடாமல் தடுப்பதற்காக இந்த மருத்துவம் செய்யப்படுகிறது.

fundus : உச்சி வாய்ப் பரப்பு; விழி மையம்; குழி முகடு : குறுகலான குழாய் அமைப்பின் உச்சி வாய்ப் பரப்பு.

funduscope : கருப்பை உச்சி ஆய்வுக் கருவி : கருப்பை அமைப்புகளை ஒரு கண்ணாய்வுக் கருவி மூலம் ஆய்வு செய்தல்.

fundus, of stomach : இரைப்பை முகடு.

fundus, oculi : விழி முகடு.

fundus, uteri : கருப்பை முகடு.

fungation : புரையோடல்.

fungicide : காளான் கொல்லி : காளான்களைக் கொல்வதற்கான மருந்து.

fungiform : காளான் வடிவம் : நாக்கின் பின் மையப் பகுதியில் காணப்படும் நாய்க்குடை (காளான்) போன்ற வடிவுடைய சதைக் காம்பு.