பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

glomerulitis

496

glucose


glomerulitis : தசை இணைக்குச்ச வீக்கம்; திரணைகள் : தசைக்கூறுகளின் இணைக்குச் சத்தில் ஏற்படும் வீக்கம்.

glomerulosclerosis : தசைக்குச்சக் கழலை : சிறுநீரகத்தின் தசைக் கூறுகளின் இணைக்குச்சத்தில் ஏற்படும் கட்டி.

glomerulus : நரம்புத்திரள்; திறணை; குஞ்சம் : நாடி நரம்புகளின் திரள் முடி.

glossa : நாக்கு.

glossectomy : நாக்கு அறுவை மருத்துவம்; நாவெடுப்பு : நாக்கை வெட்டியெடுத்தல்.

glossitis : நாக்கு அழற்சி; நாவழற்சி : நாக்கு வீக்கம்.

glossoplegia : நாக்குவாதம்; நாவாதம் : நாக்கு செயலற்றுப் போதல்,

glottis : குரல்வளை முகப்பு; குரல் வாய் : குரல் எழுகின்ற தொண் டையின் பகுதி.

glucagon : குளுகாகோன் : கணையப் பகுதியின் ஆல்ஃபா உயிரணுக்களில் உற்பத்தியாகும் இயக்குநீர் (ஹார்மோன்). இது கிளைக்கோஜனை குளுக்கோசாக மாற்றி, உணவு உண்ட போது இரத்தத்தில் சர்க்கரை அளவுக்கு மீறிக் குறைந்து விடாமல் தடுக்கிறது.

glucometer : குளூக்கோ மானி : இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அளவிடுவதற்குப் பயன்படும் மின்கலத்தின் மூலம் இயங்கும் சாதனம். விரலிலிருந்து சில இரத்தத் துளிகளை எடுத்து இந்த அளவீடு செய்யப்படுகிறது.

Glucophage : குளூக்கோஃபாஜ் : மெட்ஃபார்மின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Glucoplex : குளுக்கோப்பிளக்ஸ் : அமினோ அமிலங்களின் கரை சலின் வணிகப் பெயர். இதனை ஊசிமூலம் செலுத்தலாம்.

glucose : குளுக்கோஸ்; குருதி பழச்சர்க்கரை : கொடி முந்திரி அல்லது திராட்சைப் பழத்தி