பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

gregarianism

504

gryposis


gregarianism :கூடி வாழும் தன்மை : இணைந்து வாழும் இயல்பு; மந்தை மனப்பான்மை.

gregarious : மந்தை மனப்பான்மை : மந்தை மனப்பான் மையுடைய, கூடிவாழும் தன் மையுடைய இணைந்து வாழ விரும்புகிற.

grid : கிரிடு கருவி : ஊடுகதிர்ச் சோதனையின்போது உண்டாகும் கதிரியக்கச் சிதறலை ஈர்த்துக் கொள்வதற்குக் கதிரியல் துறையிலுள்ள ஒரு சாதனம். இதில், எளிய குடல்வால் அழற்சிக்கு அறுவை மருத்துவம் செய்வதற்கான இரும்புக் கத்தியுடன் கூடிய பல குறுகிய ஈயப்பட்டைகள் அடங்கியிருக்கும்.

grinder's asthma : உலோகத் தூசு ஈளை நோய் : உலோகத் தூசியை சுவாசிப்பதால் உண்டாகும் நோய்.

gripe : கடும் வயிற்று வலி; வயிற்றளைவு : கடுமையான வயிற்று நோவு குடற் சுருக்கு வலி.

Gripe-water : குடல் வலி மருந்து.

grippa : கடும் சளிக் காய்ச்சல்.

griseofulvin : கிரைசியோஃபுல்வின் : படர்தாமரை நோய்க்குப் பயன்படுத்தப்படும் மருந்து. இது வாய்வழி உட்கொள்ளப் படுகிறது.

gristle : குருத்தெலும்பு.

gritty : முருட்டு.

grocer's itch : கரப்பான் நோய் : சர்க்கரையை அல்லது மாவைக் கையாள்வதால் மளிகைக்கடை காரருக்கு உண்டாகும் கரப்பான் நோய்.

groin : அரை/இடுப்பு : வயிறும் தொடையும் சேருமிடம்.

ground : தளம்; இடம்; தரை : 1. நிலப்பரப்பின் அடித்தளம். 2. அடிப்படைப் பொருள். 3. பொடியாக்கப்பட்ட தூள்.

ground. dumping : கொட்டிடம்.

group : தொகுப்பு; வகை.

group, blood : குருதி வகை; இரத்த வகை.

group therapy : குழும மருத்துவம் : உணர்வு அல்லது உணவியல் பிரச்சினைகளுடைய நோயாளிகளின் ஒரு குழுமத்துக்கு உளவியல் மருத்துவமளித்தல்.

grove : சோலை; தோப்பு.

growing pains : இளம்பிள்ளை நரம்பு நோவு; வளர்ச்சி வலி : இளமையில் உறுப்புகளில் உண்டாகும் வலி. இது வாத வலியிலிருந்து வேறுபட்டது.

growth : வளர்ச்சி.

gryposis : மிகை வளைவு : உடலின் ஏதேனும் உறுப்பில், குறிப்பாக நகங்களில் இயல்புக்கு மீறிய வளைவு இருத்தல்.