பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

homicide

535

homonomous


homicide : மனிதக் கொலை; கொலை : ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தல், ஒருவர் மற்றவரை வேண்டுமென்றே உட்கருத்துடன் கொன்றால், அது குற்றமுறு கொலைச் செயலாகும்; தற்செயலாக மரணம் விளைவித்தால், அது தற்செயல் கொலைச் செயலாகும்.

homo : மனித இனம்.

homoetherapy : இனமுறை மருத்துவச் சிகிச்சை : நோயைத் தூண்டுகிற பொருள் போன்ற ஒரு பொருளைக் கொண்டு நோய்க்குச் சிகிச்சையளித்தல்.

homocystinuria : சிறுநீர்க் கந்தகம் : சிறுநீரில் அமினோ அமிலம் அடங்கிய 'ஹேமேசிஸ்டைன்' என்ற கந்தகம் அடங்கியிருத்தல். இது பிறவிலேயே மரபாக உண்டாகும் வளர்சிதை மாற்றப் பிழையாகும். இதனால் மனவளர்ச்சி குன்றுதல். கண்வில்லை இடம் மாறுதல், எலும்புகள் அளவுக்கு மீறி வளர்ச்சியடைதல் போன்ற கோளாறுகள் ஏற்படும். குழந்தை களுக்கு மரணம் விளையலாம்.

homogametic : உயிரணு ஒரு சீர்மை : உயிரணுக்களை உராய்வதன் மூலம் திசுவை ஒரு சீராக்குதல்.

homogeneous : ஒரு சீரான; ஒரே படித்தான; ஓரின : உறுப்புகள் அனைத்தும் ஒரே மாதிரியாக அமைந்திருத்தல். எங்கணும் ஒரே மாதிரியான தன்மை கொண்ட.

homogenesis : ஒரேவகை இனப்பெருக்க முறை : அடுத்தடுத்த தலைமுறைகளில் ஒரே செயல் முறை மூலம் இனப்பெருக்கம் செய்தல், அதாவது, பின் தோன்றல்கள் பெற்றோர் போலவே இருந்து அதே மாதிரி வாழ்க்கைப் போக்கை உடைய இனப் பெருக்கமுறை.

homogenetic, homogenetical : பொதுவான மரபு வழிப்பட்ட.

homogenize : ஒருபடித்தாக்கம்; ஒரே சீராக்கு : ஒரு படித்தாக இருக்கும்படி செய்தல், பாலில் உள்ள கொழுப்பு அணுக்களை உடைத்து அதனை நன்றாகச் செரிக்கத் தக்கதாகச் செய்தல்.

homogenous : ஓரின.

homogeny : ஒரு படித்தான நிலை : ஒரே மூலத்தினின்றும் தோன்றி யதனால் ஏற்படும் ஒரு படித்தான நிலை.

homologous : ஒத்திசைவு; ஒத்தமைப்பு : பண்பொத்த உடனொத்த தொடர்புடைய உயிரணுக்கள் பிளவுபடும்போது ஒவ்வொரு பிரிவும் கட்டமைப்புடன் இருத்தல்,

homo nomous :ஒரே வித வளர்ச்சிக்குட்பட்ட.