பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

human leuco...

539

Hurler's syndrome


நோய்த் தடைக்காப்புச் செயற் பாட்டினைப் படிப்படியாகக் குறைக்கிறது.

human leucocyte antigens : மனித வெள்ளையணுக் காப்பு மூலம் : திசு ஒத்தியல்புத் திறனுடைய காப்பு மூலங்களில் முக்கியமான வகைகளில் ஒன்று. உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் நன்கொடையாளருக்கும் நன் கொடை பெறுபவருக்குமிடையே திசு ஒத்தியல்பு இருக்கிறதா என்பதை ஆராய இது உதவுகிறது. இந்தக் காப்பு மூலங்கள், குறிப்பிட்ட நோய்களுடன் தொடர்புடையவை.

human T-cell lymphotropic viruses (HTLV) : மனித T-உயிரணு நிணநீர்க் கிருமிகள் : மனிதருக்கு வெண்குட்டம் உண்டாக்கும் நோய்க்கிருமி. இது 'எயிட்ஸ்' என்னும் ஏமக்குறைவு நோய்க்கும் காரணமாகிறது.

human nature : மனித இயல்பு; மனிதத் தன்மை.

humanism : மனித குணநலக் கோட்பாடு.

human kind : மனித இனம்; மனித குலம்.

humerus : கைமேலெலும்பு; மேற்கையெலும்பு: புய எலும்பு : மனிதஉடலில் கையின் மேற்புறமுள்ள எலும்பு.

humor : தாதுநீர் : உடம்பின் தாதுக்களைச் சார்ந்த நீர்.

humoralism : உடல் நீரியல் கோட்பாடு : உடலின் நீரியல் தாதுப் பொருள்களின் நிலைகளினாலேயே நோய்கள் தோன்றுகின்றன என்னும் கோட்பாடு.

hump : கூன் : முதுகில் இயற்கையாக ஏற்பட்டுள்ள கூன்.

hump-back : கூனன் : கூனல் முதுகுடையவர்.

Humulin : ஹியூமுல்லின் : மனிதக்கணையச் சுரப்பு நீர்த் (இன்சுலின்) தயாரிப்பின் வணிகப் பெயர். இதில் விலங்குக் கணையச் சுரப்பு நீரோ, கணைய மாசு பாடுகளோ இருப்பதில்லை.

hunger : பசி, உணவு வேட்கை : பொதுவாக உணவை உண்பதற்கான விருப்பம். பசியினால் இரைப்பையில் வலி உண்டாகும். உணவு உண்டதும் வலி நீங்கிவிடும் முன் சிறுகுடலில் புண் ஏற்படுவதால் இந்த வலி உண்டாகிறது.

hunger, pain : பசிக்கொடுமை; பசி நோவு.

Hunter's syndrome : ஹன்டர் நோய் : குள்ளத்தன்மை, மன வளர்ச்சிக் குறைபாடு போன்ற நோய்களை உண்டாக்கும் ஒரு மரபணுப் கோளாறு. கானடா மருத்துவ அறிஞர் சார்லஸ் பெயரால் அழைக்கப்படுகிறது.

Hurler's syndrome : ஹார்லர் நோய் : கடும் மனவளர்ச்சிக் குறைபாட்டினை உண்டாக்கும்