பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hydrotherapy

544

hygiene


hydrotherapy : நீர் மருத்துவ முறை; குளியல் மருத்துவம் நீர் மருத்துவம் : அகப்புற நிலைகளில் நீரைப் பயன்படுத்தி நோயைக் குணப்படுத்தும் மருத்துவமுறை.

hydrothorax : மார்புநீர்க்கோவை; நீர்மார்பகம்; நுரையீரல் நீருறை : மார்புவரி உட்பள்ளத்தில் ஏற்படும் நீர்க்கோவை நோய்.

hydrotropism : ஈரச்சார்பியக்கம் : நீரை நோக்கி அல்லது நீரிலிருந்து விலகிச் செல்லும், வளரும் உயிரிகளின் குணம்.

hydrotubation : திரவ மருந்துச் செலுத்தம் : கருப்பைக் குழிவினுள் கருப்பை வாய் வழியாகத் திரவ மருந்தினை அல்லது உப்புக் கரைசலை ஊசிவழி செலுத்துதல் இது கரு வெளியேறும் குழாய்களை விரிவடையச் செய்வதற்காகச் செய்யப்படுகிறது.

hydroureter : சிறுநீர்க் குழாய்த்தடை நீக்கம் : சிறுநீரினால் அல்லது நீர்மத்தால் சிறுநீர்க் குழாயினை விரிவடையச் செய்து தடை நீக்குதல்.

hydroxycobalamin : ஹைட்ராக்சிகோபாலமின் : வைட்டமின் B12 என்ற ஊசி மருந்தின் வணிகப் பெயர்.

hydroxybutyrate (dehydroge nase) : ஹைட்ராக்சிபூட்ரேட் (டிஹைட்ரோஜினேஸ்) : நிண இயக்குநீர் (என்சைம்). இது நெஞ்சுப்பைத் தசைப்பகுதி வீக்கத்தைக் குறிக்கும்.

hydroxyl : ஹைட்ராக்சில் : ஒற்றை இணைதிறனுள்ள அயனி (OH). இதில் ஒர் ஆக்சிஜன் அணுவுடன் இணைந்துள்ள ஒரு ஹைட்ரஜன் அணு அடங்கியிருக்கும்.

hydroxy progesterone caprate : ஹைட்ராக்சிபுரோஜெஸ்டிரான் காப்ரோயேட் : அடிக்கடிக் கருச்சிதைவு ஏற்படுவதைத் தடுக்கத் தசையில் ஊசி வழி செலுத்தப்படும் மருந்து.

hydroxyurea : ஹைஇட்ராக்சி யூரியா : வெண்குட்டத்திற்கு வாய்வழி கொடுக்கப்படும் ஒரு கூட்டுப் பொருள்.

hydroxyzine : ஹைட்ரோக்சிசின் : குமட்டல், வாந்தி ஆகியவற்றை நிறுத்தப் பயன்படும் மருந்து.

hygiene, personal : தன் தூய்மை.

hygienist : உடல் நல வல்லுநர் : உடல் நலம் பேணும் கலையில் தொழில் நுட்பப் பயிற்சி பெற்ற வல்லுநர். பல் நலம் பேணும் வல்லுநர், தொழிலியல் உடல்நலம் பேணும் வல்லுநர் ஆகியோரும் இதில் அடங்குவர்.

hygiene : உடல்நல இயல்; தூய்மை; துப்புரவு :உடல் நலம் பேணுவது பற்றிய அறிவியல்.