பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hypertonic

552

hypnosis


கட்டமைப்பில் திண்மை அளவுக்கு அதிகமாக இருத்தல்.

hypertonic : மிகைத்தசை விறைப்பு : 1. தசையிறுக்கம், விறைப்பு அதிகமாதல், 2. ஒப்பீட்டுக் கரைசலை விட ஊடுகசிவு அழுத்தம் அதிகமாக இருத்தல்.

hypertonicity : மிகைத்தசை திண்மை : 1. உடல் நீர்மங்களின் ஊடுகசிவு அழுத்தம் அதிகமாக இருத்தல்.

hypertrichosis : மிகைமயிர் அடர்த்தி : பொதுவாக மயிர் அதிகமில்லாத இடங்களில் மயிர் அளவுக்கு அதிகமாக அடர்ந்திருத்தல் (எ.டு) நெற்றி.

hypertrophy : உறுப்புப் பொருமல்; மிகை வளர்ச்சி; பெருக்கம்; அதிவளப்பம்; வளர்வு மிகை : மிகை ஊட்டத்தால் ஏற்படும் உறுப்புப் பொருமல்.

hyperviscosity : குருதி நீர்மிகைக் குழைமம் : குருதி நீர்க் குழைமநிலை கணிசமாக அதிகரித்திருத்தல். இது பொதுவாக வால்டன்ஸ்டிராம் வேரில் காணப்படும். இதில் சுற்றோட்டமாகச் செல்லும் IgM குருதி நீர் உயிரணு அபரிமிதமாக அதிகரிக்கும். IgG, IgA குருதிநீர் உயிரணுக்கள் சற்று குறைவாக இருக்கும்.

hiperuricaemia : மிகை சிறுநீர் அமிலம் : இரத்தத்தில் சிறுநீர் அமிலம் அளவுக்கு அதிகமாக இருத்தல். இது கீல்வாதத்தின் அறிகுறி.

hyperventilation : மிகை மூச்சு : சாலிசைலேட் நச்சு, தலைக் காயம் போன்ற நேரங்களில் மிகுதியாக மூச்சுவிடுதல்.

hypervitaminosis : உயிர்ச்சத்து மிகைப்பு; மிகை வைட்டமின் : வைட்டமின்களை, முக்கியமாக வைட்டமின் D-ஐ அதிகஅளவு உட்கொள்வதால் உண்டாகும் நிலைமை.

hyper volaemia : மிகைக் குருதியோட்டம் : சுற்றோட்டமாகச் செல்லும் குருதியின் அளவு அதிகமாக இருத்தல்.

hypeaema : கண் அறைக் குருதி; குருதி முன்னறை : கண் முன்புற அறையில் குருதி இருத்தல்.

hyphema : விழித்திரைப்படலக் காயம் : விழித்திரைப்படத்தில் ஏற்படும் காயம். இதனால் முன்புற அறைக்குள் இரத்தம் ஒழுகும்.

hypnogenesis : துஞ்சுநிலை; தூண்டிவிடல்.

hypnology : அரிதுயிலில் : மன ஆற்றல் கொண்டு தூண்டப்படும் அரிதுயில் பற்றிய ஆய்வியல்.

hypnosis : அரிதுயில் நிலை : மன ஆற்றல் கொண்டு தூண்டப்