பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

immuno com...

569

immunoglobulins


immuno compromised patients : தடைகாப்பு ஒடுங்கிய நோயாளிகள் : தடைகாப்பு நிலை ஒடுக்கப்பட்ட நோயாளிகள். மருந்துகளினால் குறைபா டான நோய்த்தடை காப்பு எற்படுதல்.

immunodeficency : தடைகாப்புக் குறைபாடு : நோய்த் தடைக்காப்பு நிலை குறைவாக இருத்தல். இதனால் நோய்கள் எளிதில் பீடிக்கின்றன.

immuno deficiency diseases : தடைக்காப்புக் குறைபாட்டு நோய்கள் : நோய்த்தடை காப்பு நிலையில் ஏற்படும் கோளாறுகளினால் வரும் அல்லது வந்தடையும் நோய்.

immunodiagnosis : ஏமக்காப்பு நோய் நாடல் : காப்பு மூலங்களைப் பொறுத்து தற்காப்பு மூலங்கள் மிகுதியாக இருப்பதை அடிப்படையாகக் கொண்ட நோய் அறிதல்.

immunodiffusion : ஏமக்காப்பு பரவல் : பல்வேறு பகுதிகளிலிருந்து காப்பு மூலமும் தற்காப்பு மூலமும் பரவுதல்.

immunoelectrophoresis : ஏமக்காப்பு மின் விலக்கு : மின் விலக்கு, இரட்டைப் பரவல் சார்ந்த ஒரு முறை. மின் விலக்கு நகர்திறன், காப்பு மூலப் பண்புகள் அடிப்படையிலான புரதங்களை அடையாளங் காண்பதற்கான முறை.

immunoen hancement : ஏமக்காப்பு அதிகரிப்பு : ஏமக்காப்புத் துலங்கல் அளவை அதிகரிப்பதற்கான செய்முறை.

immunofluorescence : ஏமக்காப்பு இடமாற்றம் : திசுவிலுள்ள காப்பு மூலம் அல்லது தற்காப்பு மூலம் இருக்கும் இடத்தை ஒளிர்வு மூலம் அறுதியிடல்.

immunogen : ஏமக்காப்பு தூண்டுபொருள் : ஒரு ஏமக்காப்புத் துலங்கலைத் தூண்டக்கூடிய பொருள் எதுவும்.

immunogenesis : தடைகாப்பு உருவாக்கம் : உடம்பில் நோய்த் தடைகாப்பு நிலையை உருவாக்கும் முறை ஏமவாக்கம்.

immunogenetics : ஏமக்காப்பு மரபணுவியல் : ஏமக்காப்புத் துலங்கலைப் பாதிக்கக்கூடிய மரபணுக்காரணிகளை ஆராய்தல்.

immunogenicity : தடைகாப்பு தூண்டுதிறன் : உடலில் நோய்த் தடைகாப்பு நிலையைத் தூண்டும் திறம்பாடு ஏமத்துண்டு திறன்.

immunoglobulins (Igs) : தடைகாப்புப் புரதங்கள் : அதிக அளவு மூலக்காற்று எடையுள்ள புரதங்கள். இதனை நிணநீர் உற்பத்தி செய்கிறது. இது பாக்டீரியா, போன்ற