பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

indapamide

576

indicanuria


indapamide : இண்டாப்பாமைடு : தாழ்ந்த குருதியழுத்தத்தை எதிர்க்கும் சிறுநீர்க் கழிவினைத் தூண்டும் மருத்துவம்.

indema : இண்டிமா : ஃபெனிண்டியோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

indentation : குழிவு; சிறுவளைவு.

Inderal : இண்டெரால் : புரோப்ரானோலால் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

inderetic : இண்டெரெட்டிக் : பெண்ட்ரோஃபுளுசைட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

index : அட்டவணை; சுட்டு; நிரல்.

index, blood : குருதி அளவை.

index, colour : நிற அளவை.

index, finger : சுட்டுவிரல்.

Index Medicus : மருத்துவ ஆதார இதழ் : தேசிய மருத்துவ நூலகத்தின் (National library of Medicina) ஒரு வெளியீடு, உயிரி மருந்து இதழ்கள், சுகாதார ஆய்வாதாரங்கள் ஆகியவற்றில் வெளியாகும் கட்டுரைகள் இதில் அடங்கியிருக்கும்.

Indian childhood cirrhosis : இந்திய குழந்தைப் பருவக் கரணை நோய் :குழந்தைகளின் குழவிப் பருவத்தில் ஏற்படும் மரணம் விளைவிக்கும் குடும்ப நோய். இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் நடுத்தர இந்துக் குடும்பங்களில் இது முதல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் காய்ச்சல், திசு ஆக்சிஜன் குறைபாடு, ஈரல் விரிவு, திடீர்க் கரணை, கல்லீரல் செயலின்மை ஆகியவை உண்டாகிறது. உணவில் அளவுக்கு அதிகமாக செம்புச்சத்து சேர் வதால் இது உண்டாவதாகக் கருதப்படுகிறது. செப்புப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதால் இந்த நோய் ஏற்படுவது குறைகிறது.

indian hemp : இந்தியச் சணல்.

indican : இண்டிக்கான் : சிறுநீரிலிருந்து வெளியேறும் பொட் டாசியம் உப்பு.

Indian multipurpose food : இந்திய பலநோக்கு உணவு : 25% வருத்த கடலைப் பருப்பு, 75% நிலக்கடலை மாவு கலவையால் செய்து, கனிமப் பொருள்கள், விட்டமின்கள் கலந்த சத்தூட்டப் பட்டு காய்கறியுடன் கலந்த உணவு.

indicanuria : மிகை இண்டிக்கான் : சிறுநீரில் உள்ள மிகையான பொட்டாசியம் உப்பு. இயல்பான சிறுநீரில் இது சொற்ப அளவில் இருக்கலாம். அதிக அளவில் இருந்தால் குடலில் தடை ஏற்பட்டிருப்பதைக் குறிக்கும்.