பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

infancy

579

infectious mono...


infancy : குழவிப் பருவம்; குழந்தைப் பருவம்; மழலைப் பருவம் : குழந்தையின் மிகு இளம்பருவம் குழந்தைப் பருவத்தொடக்க நிலை.

infant : குழந்தை; மழலை.

infantile : குழந்தைத்தனம்; மழலைய.

infantieism : மழலையம்; குழந்தை நிலை.உடல் மற்றும் உள்ளம் வளர்ச்சியடையாத நிலை.

infant, premature : குறைப் பேற்று மகவு.

infanticide : குழந்தைக் கொலை; மகவுக் கொலை : பிறந்தவுடன் குழந்தையைக் கொன்றுவிடும் பழக்கம், பெரும்பாலும் தாய் உடந்தையாக இருக்கும் நிலையுடைய குழந்தைக் கொலை.

infantism : உடல்-உள வளர்ச்சியின்மை; குழந்தையுள்ளம்; இளந் தோற்றம்; மழலையம் : அறிவோ உடம்போ வளர்ச்சியடையாத நிலை.

infarct : குருவிலி.

infarction : திசு மாள்வு; அழிவு; குருதி நசிவுறல் : இரத்தம் பாய்வது நின்று போவதால் திசுவின் ஒரு பகுதி மாண்டு போதல்.

infect : நோய்த் தொற்று : நோய் உண்டாக்கும் உயிரிகள் பற்றுதல்.

infection : நோய்த் தொற்றுதல்; நோய்த்தொற்று; தொற்று; பரவு : காற்று, நீர், மூலம் நோய்க் கிருமிகள் பரவி நோய்த் தொற்றுதல்.

infection, ainborme : வலித்தொற்று.

infection, droplet : திவலைத் தொற்று.

infection. secontary : சார் தொற்று.

infection, silent : மறைத் தொற்று.

infection, subclinical : அடைத்தொற்று; உள் தொற்று.

infectious : தொற்ற வல்ல; தொற்று நிலை.

infectious disease : தொற்று; நோய் : ஒரு குறிப்பிட்ட நோய் கிருமி மூலம் தொற்றுகிற நோய். இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக பரவும்.

infectious mononucIeosis : சுரப்பிக் காய்ச்சல் : ஒருவகைத் தொற்று. நோய். இந்நோய் கண்டவர்களுக்குக் காய்ச்சல், தொண்டைப்புண், நிணநீர்க் கரணைகள் விரிவடைதல் உண்டாகும்.