பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

inverted comma sign

594

iodine


inverted comma sign : தலைக்கீழ்க் காற்புள்ளிக் குறி : ஒற்றை உறுப்புத் தொங்கு சதையின் மாறுபாட்டைக் காட்டும் சமதள மார்புப் படத்தில் காணப்படும் ஊடுகதிர் இயல்பு திரிபு. வலது மேல்மடலின் மென் தோலில் அதன் ஈரல் சவ்வு முடியிருக்கும்.

invertor : சுழல்தசை : ஒரு தசையின் ஒருபகுதி உள் முகச் சுழல்தல்.

investing : உள்பொதிதல் : ஒரு மேற்படலத்தில் அல்லது தக்க பொருளில் கவசமிடுதல்.

in vitro : கண்ணாடிக் குழாயில்; குழலில்; புறநிலை : வேதியியல் துறை ஆய்வுக் கூடத்தில் சோதனைக் கண்ணாடிக் குழாயில்.

in vive : அக நிலை.

in vivo : உயிருள்ள திசுவில்; உடலுக்குள் அகநிலை.

involcrum : எலும்பு மேலுறை : புதிய எலும்பின் மேலுறை. இது எலும்பு இழைமத்தைச் சுற்றி அமையும்.

involuntary : தன்னியக்க; அனிச்சநிலைய : விருப்பாற்றலுக்குட் படாமல் தானாக இயல்கிற, இதயத் தசைகள், இவ்வாறு இயங்குவன.

involution : உட்பிதுக்கம்; உட்சுருங்கல்; உள் மடிப்பு; உட்சுருள்வு : ஒர் உறுப்பு தனது பணியைச் செய்து முடித்ததும் இயல்பாகச் சுருண்டு சுருங்கி விடுதல். எடுத்துக்காட்டாக, மகப்பேற்றுக்குப் பிறகு கருப்பைச் சுருங்கிக்கொள்ளுதல்.

inward : உள் நோக்கிய.

iodamoeba : குடல் அமீபா : குடல் குழாயில் காணப்படும் அமீபாவின் (ஓரணுவுயிர்) ஒர் இனம்.

iodatol : இயோடாட்டோஸ் : அயோடினேற்றிய எண்ணெயின் வணிகப் பெயர்.

iodex : அயோடெக்ஸ் : அயோடின் அடங்கிய கறைபடாத களிம்பு மருந்தின் வணிகப்பெயர். சுளுக்கு, குழந்தைகளின் மயிர்க்குரு ஆகியவற்றுக்கு ஏற்றது.

iodides : அயோடைடுகள் : மற்றொரு தனிமத்தோடு அயோடின் சேர்ந்த கூட்டுக் கலவை. பொட்டாசியம் அயோடைடு, சோடியம் அயோடைடு ஆகியவை மருத்துவத்தில் பெருமளவில் பயன்படுகின்றன.

iodine : அயோடின் (கறையம்) : கரியப் பொருளைக் கருந்தவிட்டு நிறமாகக் கறைப்படுத்தும்.