பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Jackson's membrane

604

Jacobson's nerve


ஜேக்சன் பெயரால் அழைக்கப்படுகிறது. இரு தரப்பானதசைத் துடிப்பு அசைவுகள் ஏற்படும். இந்த அசைவுகள் ஒரு தசைக் குழுமத்தில் தொடங்கி படிப்படியாக அடுத்துள்ள குழுமத்துக்குப் பரவுகிறது. இது காக்காய் வலிப்பு நடவடிக்கை, கட்டளை மூளை மேலுறை மூலமாக வாய், கட்டை விரல், பாதம் ஆகியவற்றுக்கு நகர்வதைக் குறிக்கிறது. இந்தப் பாதிப்பு, சில வினாடிகள் முதல் பல மணிநேரம் வரை மாறுபட்ட காலத்துக்கு நீடிக்கலாம்.

Jackson's membrane : ஜேக்சன் சவ்வு : மேல்நோக்கிய பெருங்குடல் முன்பகுதியிலிருந்து அடிவயிற்றுச் சுவரின் பின் பகுதியிலுள்ள கிடைமட்டப் பகுதிக்குச் செல்லும் மெல்லியபடலம். அமெரிக்க அறுவை மருத்துவ வல்லுநர் ஜேபஸ் ஜேக்சன் பெயரால் அழைக்கப் படுகிறது.

Jackson's rule : ஜேக்சன் விதி : "காக்காய் வலிப்பு ஏற்பட்ட பிறகு, எளிய நரம்புச் செயல் முறைகள், சிக்கலான செயல்முறைகள் விரைவாகப் பழைய நிலைக்கு மீண்டு விடுகின்றன" என்னும் ஜான் ஹங்ளிங்ஸ் ஜேக்சன் வகுத்த விதி.

Jackson's safety triangle sign : ஜேக்சன் பாதுகாப்பு முக்கோணக் குறியீடு : கேடயக் குருத்தெலும் பின் கீழ்முனை கீழேயும் பக்கங்களில் மார்பெலும்புக் கூம்பு முனைத் தசைகளும், உச்சியில் மார்பெலும்பும் மேல் வடுவும் சூழ்ந்த ஒரு முக்கோணப் பகுதி. இந்தப் பகுதியினுள் மூச்சுக் குழாயினைப் பத்திரமாக வைக்கலாம் என்று செவாலியர் ஜேக்சன் விளக்கிக் கூறினார்.

Jackson's syndrome : ஜேக்சன் நோய் : பின் மூளையில் குருதி நாளப்புண் காரணமாக மண்டையோட்டின் 10, 11, 12 ஆகிய நரம்புகள் செயலிழத்தல்.

Jackobaeus operation : ஜெக்கோபேயஸ் அறுவைச் சிகிச்சை : நுரையீரல் ஒட்டிணைவுகளை மார்பு உள்வரிச்சவ்வு ஆய்வுக் கருவி, பின்வழித் தீய்த்தல் மூலம் அகற்றுதல், ஹேன்ஸ் ஜேக்கோ பேயஸ் என்ற சுவீடன் அறுவைச் சிகிச்சை வல்லுநர் பெயரால் அழைக்கப்படுகிறது.

Jacobine : ஜேக்கோபைன் : செனிசியோ ஜேக்கோபியா என்னும் தாவரத்திலிருந்து எடுக்கப்படும் நச்சுக் காரம் இது ஈரலில் திசு நசிவினை உண்டாக்கும்.

Jacobson's nerve : ஜேக்கப்சன் நரம்பு : செவிப்பறை நரம்பு டேனிஷ் உடல் உட்கூறியல்.