பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Krause's membrane

623

Kupffer's cells


பெரிய கவசங்களால் மூடப் பட்டிருக்கும்.

Krause's membrane : கிராஸ் சவ்வு : மண்டையோட்டு பட்டைகளை இரு கூறாக வெட்டும் குறுக்கு வெட்டுக் கோடு. இதனை "Z" பட்டை என்றும் அழைக்கப்படுகிறது.

krogh coefficient : கிராக் குணகம் : சிதறல் திறனுக்கும் அண் பல் கற்றோட்டத்துக்கு மிடையிலான விகிதம். இதனை ஆகஸ்ட் மற்றும் மேரி கிராக் இருவரும் விவரித்துக் கூறினார்.

kronig's isthmus : குரோனிக் இடுக்கு : நுரையீரலின் மேல் நுணிக்கு நேரிணையான ஒலியலை எதிர்வுப் பட்டை. இதனை இடைநிலையில் கழுத்தும் பக்க வாட்டில் தோள்களும், பின்புறத்தில் கழுத்துப் பட்டை எலும்பு, முன்புறத்தில் ஊசுதண்ட தசையும் சூழ்ந்திருக்கும். இது இயல்பாக ஒலியலை எதிர்வுடையது.

kultschitsky cell : குல்ட்ஷிட்ஸ்கி உயிரணு அர்ஜென்டாஃபின் என்ற உயிரணு, இதனை ரஷிய மருத்துவ அறிஞர் நிக்கோலாய் குல்ட்ஷிட்ஸ்கி விவரித்துக் கூறினார்.

Kugelberg-Welander disease : கூகல்பெர்க்-வெலாண்டர் நோய் : குழந்தைகளிடம் பரம்பரையாக ஏற்படும் தசை நலிவு நோய். இது தண்டுவடத்தில் பின்புறக்கொம்பு உயிரணுக்கள் இழப்பு காரணமாக உண்டாகிறது. இதனை ஒரு சுவீடன் நரம்பியலறிஞர் விவரித்துக் கூறினார். நான்கு உறுப்புகளின் மையம் நோக்கிய தசைகள் இதில் தொடர்புடையவை.

kummell's disease : கும்பல் நோய் : முதுகெலும்பில் ஏற்படும் அழுத்த முறிவு. இதில் வலி, நரம்புவலி, முதுகுத்தண்டு வளைவு (கூனல்) கால்பலவீனம் உண்டாகும். ஜெர்மன் அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஹெர்மான் கும்மல் பெயரால் அழைக்கப் படுகிறது.

Kuntscher nail : குன்ட்ஷெர் ஆணி : நீண்ட எலும்புகளின் முறிந்த முனைகளைப் பொருத்துவதற்குப் பயன்படுத்தப்படும் துருப்பிடிக்காத எஃகினாலான ஆணி ஜெர்மன் அறுவைச்சிகிச்சை வல்லுநர் ஜெர்ஹார்ட்குன்ட்ஷெர் பெயரால் அழைக் கப்படுகிறது.

Kupffer's cells : குப்ஃபெர் உயிரணுக்கள் : துகள்சூழ் உயிரணுக் களையுடைய குருதியோட்ட மண்டலத்தின் பெரிய பிரமிடு வடிவ செறிவுமிக்க உயிரணுக்கள். இவை ஈரலின் எலும்பு உட்புழையின் உள்வரிப்பூச்சாக அமைந்திருக்கும். இது, ஜெர்மன் உடல் உட்கூறியலறிஞர் கார்ல் வான்குப்ஃபெர் பெயரால் அழைக்கப்படுகிறது.