பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/625

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

kur

624

kynurenine


kur : மைய நரம்பு நோய் : மைய நரம்பு மண்டலத்தில் மெல்ல மெல்ல உண்டாகும் கிருமி நோய். இது மனித இறைச்சியை உண்பதால் உண்டாகிறது. நியூகினியில் மலைவாழ் மக்களிடம் பெரும்பாலும் ஏற்படுகிறது.

Kuru : குரு/சிறை நோய் : மரணம் விளைவிக்கக்கூடிய நரம்பியல் சிறை நோய். நியூகினியிலுள்ள மெலனேசிய மரபுக் குழுவினரில் மனிதப் பண்புகளை நினைவூட்டும் இயல்புடைய பால்குடி உயிரினங்களால் இது பரவுகிறது. 'குரு' என்பதற்கு அவர்கள் மொழியில் காய்ச்சல் அல்லது குளிர் மூலம் ஏற்படும் நடுக்கம் என்று பொருள். இதனால் சிறுமூளைத் தள்ளாட்டம், நடுக்கம், வாய்க்குளறல் ஏற்பட்டு, படிப்படியாக இயக்க நரம்பு வாதம் உண்டாகி, இறுதியில் மரணம் விளையும்.

kwashiorkor : புரதக் குறைபாட்டு நோய்; சவலை நோய்; புடைச் சவலை : கடும்புரதச் சத்துக் குறைபாட்டினால் பிறந்த குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் ஏற்படும் நோய். இதனால், இரத்தசோகை, உடல் நலிவு, நுரையீரல் வீக்கம் ஏற்பட்டு இறுதியில் மரணம் விளையும்.

kyasanur forest disease : கியாசனூர் வனநோய்; குரங்கு நோய் : இது ஒரு குரங்கு நோய்; இது கொசு வழி பரவும் நோய்க் கிருமிகள் மூலம் பரவும் நோய். இது காடுகளில் உள்ள குரங்குகளில் உண்டாகும். மென் மர உண்ணியினால் பரப்பப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகத்தின் ஷிமோகா, தென் கன்னடம் ஆகிய பகுதிகளிலுள்ள காடுகளில் காணப்படுகிறது. இத னால் காய்ச்சல், தலைவலி, தசைவலி, கண்குழியில் வலி, வலிவிழப்பு, அரிதாகக் குருதிப் போக்கு ஏற்படும். நோய்க்குறியறிந்து இதற்குச் சிகிச்சை யளிக்கப்படும்.

kymograph : தமனி அளவை வேறு பாட்டுப் பதிவுக் கருவி; அசை வரைவி :' தமனியின் அலையூச லாட்டத்தைப் பதிவு செய்யும் ஒரு கருவி.

kynurenic acid : கைனூரனிக் அமிலம் : டிரிப்டோஃபான் வளர்சிதை மாற்றம் மூலம் உற்பத்தியாகும் ஒரு நறுமணக் கூட்டுப் பொருள். இது டிரிப் டோஃபான் வளர்சிதை மாற்றக் கோளாறுகளில் சிறுநீரில் சுரக்கிறது.

kynurenine : கைனூரினைன் : டிரிப்டோஃபான் வளர்சிதை மாற்றத்தில் உண்டாகும் ஒரு நடுத்தர அமினோ அமிலம்.