பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/633

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

laperocele

632

laryngoscopic


laperocele : குடல் சரிவு : இடுபிலுள்ள தசைகள் விலகுவதால் ஏற்படும் குடல் சரிவு.

Laplace formula : லாப்லாஸ் சூத்திரம் : ஒரு கோளத்திலுள்ள அழுத் தம், சுவர் அழுத்த நிலையை ஆரத்தினால் வகுப்பதால் கிடைக்கும். ஈவின் இரு மடங்குக்குச் சமம். இந்தச் சூத்திரத்தை 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கணித மேதை லாப்லாஸ் வகுத்துரைத்தார்.

lardaceous : கொழுமிய.

Largactil : லார்காக்டில் : அமிட்ரிப்டிலின் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

large : அகன்ற; பெரு.

laroxyl : லாரோக்சில் : அமிட்ரிடிலின் என்ற மருந்தின் வணிக பெயர்.

larva : முட்டைப்புழு; கூட்டுப்புழு; புழுப் பருவம்; இன உயிரி : அரை குறை உருமாற்றமடையும் உயிர்களின் முதிரா வடிவம்.

larvicide : முட்டைப்புழு அழிப்பான்; முட்டைப் புழுக் கொல்லி : முட்டைப் புழுவை அழித்திடும் மருந்து.

laryngeal : குரல்வளை சார்ந்த மிடற்று.

laryngectomy : குரல்வளை அறுவை மருத்துவம்; குரல்வளை வெட்டு; மிடற்றெடுப்பு : குரல் வளையை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

laryngitis : குரல்வளை அழற்சி; மிடற்றழற்சி : குரல்வளையில் ஏற்படும் வீக்கம்.

laryngoedema : குரல்வளை வீக்கம் : ஒவ்வாமை காரணமாக குரல்வளையில் உண்டாகும் வீக்கம்.

laryngologist : குரல்வளை நோய் வல்லுநர்; மிடற்றியலார்.

laryngology : குரல்வளை நோயியல்; மிடற்றியல் : குரல்வளை நோய்கள் பற்றிய ஆய்வியல்.

laryngometry : குரல்வளை அளவீடு : குரல்வளையை அளவிடுதல்.

laryngoparalysis : குரல்வளை தசை வாதம் : குரல்வளைத் தசைகளில் ஏற்படும் முடக்கு வாதம்.

laryngopharyngectomy : தொண்டை அறுவை மருத்துவம் : குரல் வளையையும் அடித் தொண்டையின் கீழ்ப்பகுதியையும் துண்டித்து அகற்றுதல்.

laryngoplasty : குரல்வளை அறுவை மருத்துவம் : குரல் வளையில் அறுவை மருத்துவம் மூலம் சீரமைப்புச் செய்தல்.

laryngoscope : குரல்வளை ஆய்வுக்கருவி; குரல்வளை நோக்கி; மிடறுகாட்டி : குரல்வளையைக் கூர்ந்து ஆய்வதற்குப் பயன்படும் துணைக் கருவித் தொகுதி.

laryngos copic : குரல்வளை ஆய்வு சார்ந்த : ஒரு சிறிய