பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/694

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

miniature radio..

693

mite


குடாவில் ஏற்படும் மெத்தில் பாதரச நஞ்சு காரணமாக எற்படும் மூளை மேலுறைச் சுருக்கம்.

miniature radiography : நுணுக்க ஊடுகதிர்ப் படமெடுத்தல் : காசநோய் ஒழிப்பு இயக்கத்தில் கையாளப்படும் ஒளிர்வு ஊடுகதிர் படமெடுக்கும் முறை.

miner's anaemia : சுரங்கச் சோகை : சுரங்கத் தொழிலாளர்களுக்கு உண்டாகும் கொக்கிப்புழு நோய்.

Minim : சிற்றலகு : மருந்து நீரளவையின் அறுபதின் கூறு.

minimum : குறுமம்; குறும.

Minocin : மினோசின் : மினோசைக்ளின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

minocycline : மினோசைக்ளின் : டெட்ராசைக்ளின்களில் ஒன்று. உணவோடு உட்கொள்ளும்போது இரைப்பையிலிருந்து ஈர்த்துக் கொள்ளப்படுகிறது.

minor : சிறு; இளநிலையர்.

miotic : கண்பார்வை சுருக்கி : 1. கண்மணிச் சுருக்கம் உண் டாக்குதல் சார்ந்த 2 கண்மணிச் சுருக்கம் உண்டாக்கும் ஒர் ஊக்கு பொருள்.

Minowlar : மினோவ்லார் : வாய் வழி உட்கொள்ளப்படும் கருத்தடை மருந்தின் வணிகப் பெயர். இதில், எத்திங்லுஸ்ட் ராடியல் நோரெஸ்திஸ்டெ ரென் அடங்கியுள்ளது.

'minoxidil : மினோக்சிடில் : மற்ற மருந்துகளுக்குக் குணமாகாத, கடுமையான, மிக உயர் இரத்த அழுத்தத்திற்குப் பயன்படுத்தப் படும் மருந்து.

Mintezo : மின்டசோல் : தையா பாண்டசோல் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

miosis (myosis) : கண்மணிச் சுருக்கம் : கண்ணின்மணி அளவுக்கு அதிகமாகச் சுருங்கி விடுதல். கண் ஆடி சுருக்கமாதலின் குறுகல் பார்வை; கிட்டப் பார்வை.

miracidium : மிராசிடியம் : தட்டைப்புழுவின் இழைபோன்ற முதற்கட்டக் கூட்டுப்புழு. இது நீரில் சுதந்திரமாக நீந்தக் கூடியது. இது நத்தைகளைப் பீடிக்கக்கூடியவை.

miscarriage : கருச்சிதைவு : உரிய காலத்திற்கு முன் கரு வெளியேறுதல்.

Mitchell's method : மிட்செல் முறை : மூல நோயைக் குணப் படுத்தும் முறை. 5% பினாலை ஊசி மூலம் செலுத்தி இந்தச் சிகிச்சையளிக்கப்படுகிறது. இது அமெரிக்க அறுவைச் சிகிச்சை வல்லுநர் மிட்செல் பெயரால் அழைக்கப்படுகிறது.

mite: நுண்பேன்.