பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/700

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

monster

699

mortuary


monster : 'பூத' உரு : ஒட்டுமொத்த உருத்திரிபுகளைக் கொண்ட முதிர்கரு அல்லது பச்சிளங் குழந்தை. இது பொதுவாக உயிர்பிழைத்திருப்பது அரிது.

Montgomery's glands : மான்ட்கிரீமரிச் சுரப்பிகள் : முலைக்காம்பின் முடிகள் இல்லாதிருக்கிற பெரிய மயிர்ப்பை எண்ணெய்ச் சுரப்பிகள். இவை ஐரிஷ் தாய்சேய் மருத்துவ அறிஞர் வில்லியம் மான்ட்காமரி பெயரால் அழைக்கப்படுகிறது.

mood : மனநிலை : படர்ந்து, பரவி, நிலைத்திருக்கிற உணர்ச்சி. இது சோர்வு, மகிழ்ச்சி அல்ல கோபம் போன்ற வடிவத்தில் உணரப்படும்.

Mooren's ulcer : மூரன் அழற்சிப் புண் : முதியவர்களின் விழி வெண்படலத்தின் மேலீடாகக் கடும் வலியுடன் உண்டாகும் நைவுப் புண். இது ஜெர்மன் கண்மருத்துவ வல்லுநர் ஏ.மூரன் பெயரால் அழைக்கப்படுகிறது.

morbidity : நோய் நிலை; நலக்கேடு : நோய் சார்ந்த நிலை.

moribific : நோயுண்டாக்கும்.

moribund : மரணத் தறுவாயில்; மாள்நிலை :சாகுந்தறுவாயிலுள்ள.

morphine : அபினிச் சத்து; மார்பின் : நோவாற்றும் மருந்தாகப் பயன்படும் அபினிச் சத்து.

morphology : உயிரின அமைப்பியல்; உடலுரு அமைப்பு; வடிவமைப்பு; வடிவவியல் : விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றின் வடிவமைப்பு பற்றிய அறிவியல்.

mortality : இறப்பு; இறக்கும் பண்பு; அழியும் இயல்பு; இறப்பு வீதம் : குறிப்பிட்ட கால அளவின்போது ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை வீதம் 'மார்ட்டாலிட்டிரேட்' என்பர்.

mortality, maternal : மகப்பேற்று மரணம்.

mortality, infant : குழந்தை மரணம்.

mortification : திசு அழிவு; உள்ளழிவு : திசுக்கள் உள்ளழிந்து கெடுதல்.

Morquio's disease : மார்க்குயோ நோய் : குருத்தெலும்பு குறை பாட்டுடன் வளர்வதால் உண்டாகும் வளர்ச்சி குன்றிய குடும்பக் குள்ளநோய். இது ஃபிரெஞ்சுக் குழந்தை மருத்துவ அறிஞர் லூயி மார்க்குயோ பெயரால் அழைக்கப்படுகிறது.

mortar : குழியம்மி : உருண்டையான உட்பகுதியைக் கொண்ட கலம். இதில் கரடு முரடான மருந்துகள் ஒரு குழவி மூலம் அடித்து, பொடியாக்கி அரைக் கப்படுகின்றன.

mortuary : பிணவறை; பினக்கிடங்கு.