பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/746

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Noonan's syndrome

745

normoblast


மாக காலில் வீக்கம் ஏற்படும் குடும்ப நோய். அமெரிக்க மருத்துவ அறிஞர்கள் மாக்ஸ் நோன், வில்லியம் மில்ராய் ஆகியோர் பெயரால் அழைக்கப் படுகிறது.

Noonan's syndrome : நூனான் நோய் : இனக்கீற்று சாராத டர்னர் நோய். அமெரிக்க குழந்தை மருத்துவ அறிஞர் ஜாக்குலின் நூனான் இதனை விளக்கியுரைத்தார். இது டர்னர் நோய்க்கு இணையாக ஆண்களுக்கு ஏற்படும் நோய். இதில் காதுகள் தாழ்ந்திருக்கும்; கழுத்தில் தோல் இழைமம் பொதிந்திருக்கும், பிறவியிலேயே இதய நோய் உண்டாகும்; சில சமயம் கடுமையான மனவளர்ச்சிக் குறைபாடு ஏற்படும்.

moradrenaline : நோராட்ரினலைன் : நோரெப்பினெஃப்னரன்; ஆட்ரி னலைன் இல்லாத என்-மெதில் குழுமம். இது.ஒரு பரிவு நரம்புக் கடத்தி.

norcuron : நார்குரான் : வெக்குரோனியம் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

norethandrolone : நோரோத்தாண்டிரோலோன் : உயிர்ச்த்து இயற்கை இயக்குநீர்.

norethisterone : நோரெத்திஸ்டிரோன் : சில ஆண்டிரோஜன் செயல்புடைய புரோஜெஸ் டிரோன்.

Norflex : நாரஃபிளக்ஸ் : ஆர்ஃபோனாட்ரின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

norfloxacin : நூர்ஃபுளோக்சாசின் : சிறுநீர்க் குழாய் நோய்களைக் குணப்படுத்துவதற்கும் பயன்படுத் தப்படும் ஒரு குயினோலோன் பாக்டீரியா எதிர்ப்புப் பொருள்.

norgestrel : நூர்கெஸ்டிரல் : வாய் வழிக் கருத்தடை மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஒரு புரோ ஜெஸ்டிரோன்.

norm : நியமம் : இயல்புநிலை அளவு. ஒரு குறிப்பிட்ட குழு மத்துக்கான ஒரு தரநிலை அளவு.

norma basalis : மண்டையோட்டு அடித்தளம் : தாடை நீக்கப்பட்ட மண்டையோட்டின் அடித்தளத்தில் உட்புறப்பரப்பு.

normal : இயல்பு நிலை : 1. உடலின் ஆரோக்கியமான இயல்பான நிலை. பொதுத் தட்பவெப்ப நிலை, 2. நீரில் கரைந்த, கிருமி நீக்கிய சோடியம் குளோரைடின் 0.9% உப்புக் கரைசல். இது குருதியை ஒத்த அணு எண்ணுடையதாக இருக்கும்.

normoblast : கருமைய முன்னோடி சிவப்பணு : இயல்பான வடிவள வுள்ள கருமையங் கொண்ட.