பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/747

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

normocapnic

746

Norwalk virus


இரத்தச் சிவப்பணுக்கள். இது சிவப்பணுக்களுக்கு முன்னோடி.

normocapnic : இயல்பு கார்பன் டையாக்சைடு : குருதியில் இயல்பான அளவில் தமனி கார்பன் டையாக்சைடு இருத்தல்.

normochromia : இயல்பு வண்ணம் : குருதிச் சிவப்பணுக்கள் இயல்பான வண்ணத்தில் இருத்தல் குருதி நிறமிபோதி அளவில் இருக்கும் நிலை.

normogły caemia : இயல்புக் குருதிச் சர்க்கரை : குருதியில் சர்க்கரை இயல்பான அளவில் இருத்தல்.

normocyte : இயல்புச் சிவப்பணு : இயல்பான வடிவளவுள்ள இரத்தச் சிவப்பணு.

normoglycaemia : இயல்புச் சர்க்கரை : இரத்தத்தில் இயல்பான அளவில் சர்க்கரை இருத்தல்.

normo kałaemia : இயல்புக் குருதிப்பொட்டாசியம் : குருதியில் பொட்டாசியம் இயல்பான அளவில் இருத்தல்.

normotension : இயல்பு அழுத்தம்; இயலழுத்தம் : இயல்பான அளவு இரத்த அழுத்தம்.

normothermia : இயல்பு வெப்பம் : உடலிலுள்ள இயல்பான அளவு வெப்பம். இது மிகை வெப்பம், குறை வெப்பம் இரண்டுக்கும் வேறுபட்டது.

normotonic : இயல்புத் தசைத்திசு : தசைத்திசு இயல்பான அளவு வலிமை, விறைப்பு, இயக்கத் திறுனுடன் இருத்தல்.

Norplant : நார்ப்பிளாண்ட் : லீவோ நார்கெஸ்டிரால் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Norri's disease : நோரி நோய் : பாலியல் தொடர்புடைய பரம்பரைக் குருடு நோயின் ஓர் அரிதான வடிவம். இது திரிபான விழித்திரை காரணமாக உண்டாகிறது. டேனிஷ் கண் மருத்தவ அறிஞர் கார்டான் நோரி பெயரால் அழைக்கப் படுகிறது.

northern blotting : வடமுனைக் கறை : கடல்பாசி பகையில் இருந்து நைலான இழை மத்துக்கு ஆர்.என்.ஏ-ஐ மாற்றுகிற நடமுறை.

nortriptyline :  : அமிட்ரிப்டிலின் போன்றதொரு சோர்வகற்றும் மருந்து.

nortryptiline : நார்ட்ரிப்டிலின் : மனச்சோர்வின்போது பயன் படுத்தப்படும் மூச்சுழற்சி சோர்வு நீக்க மருந்து.

Norwalk virus : நூர்ட்ரிப்டிலின்  : இரைப்பை-குடல் அழற்சியை கொள்ளை நோயாகப் பரப்பும் காதருகு சுரப்பிக் கிருமி. இது அமெரிக்காவில் ஒகியோ மாநிலத்