பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/749

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Nothnagel's..

748

nuclear family


Nothnagel's syndrome : நூத்னாகல் நோய் : மூளை நடுத்தண்டு நோய். இதில் நடுமூளையின் மேற்கூரையில் நைவுப்புண் உண்டாகும். ஜெர்மன் மருத்துவ அறிஞர் வில்ஹெல்ம் நூத்னாகல் பெயரால் அழைக்கப்படுகிறது. கண் முடக்குவாதம், மூளைத் தள்ளாட்டம் போன்ற அறிகுறிகளுடன் உடற்கட்டி உண்டாகும்.

notifiable diseases : அபாய அறிவிப்பு நோய்கள் : பொதுச் ககாதாரத்துக்குக் கடும் அபாயம் விளைவிக்கக்கூடியவை எனக் கருதப்படும் தொற்றக் கூடிய நோய்கள் என எச்சரிக்கை விடுக்கத்தக்க நோய்கள்.

notification : அறிவிக்கை; நோய் அறிவிப்பு :' ஒரு தொற்று நோய் கண்டுபிடிக்கப்படுமானால், அதனை உடனடியாக உள்ளுர்ச் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும். அந்த நோய் பரவுவதைத் தடுக்க அவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க இது உதவும்.

notalgia : முதுகுவலி : முதுகில் ஏற்படும் வலி.

notochord : முதுகுத் தண்டு : முதுகெலும்புக்கு முல அடிப்படை எலும்பாக அமையும் முதுகெலும்புத் தண்டு.

nourish : சத்தூட்டம் : உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஊட்டச் சத்துகளை அளித்தல்.

nourishment : சத்தூட்டுதல்; ஊட்டம் : 1. சத்துட்டம் அளிக்கும் செயல். 2. உயிருள்ள உயிரிகளின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் ஊட்டம் அளிக்கும் ஒரு பொருள்.

Novocaine : நோவோக்கேய்ன் : புரோக்கேய்ன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Noxyl flex : நாக்சில் ஃபிளக்ஸ் : நாக்சிட்டியோலின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

noxytiolin : நாக்சிட்டியோலின் : பாக்டீரியாக்களுக்கான ஒரு கரைசல் மருந்து நோயுற்ற சவ்வுப்பைகளில் தெளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

NSU; (Non specific urethrites) : சிறுநீர்ப் புறவழி அழற்சி : வெட் டையில் பாத சிறுநீர்ப் புறவழி அழற்சி.

nucha : பிடரி : கழுத்தின் பின் புறம்.

nuclear : கருமையம் சார்ந்த : கருமையம் தொடர்பான அல்லது அதனை ஒத்திருக்கிற.

nuclear cytoplasmic ratio : திசுப்பாய்ம விகிதம் : திசுப் பாய்ம விகிதம் கரு மையங்கள், உக்கரமான உயிரணுக்களில் உள்ளது போல், அவற்றுடன் இணைந்து வரும் திசுப் பாய்மத்தைவிட வீத அளவில் அதிகமாக இருக்கும்.

nuclear family : கருமையக் குடும்பம் : பெற்றோர்கள், அவற்றின்