பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/781

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

osteocyte

780

osteopaenia


வேறு நிலைகளில் காணப்படும் முதிர்கருக் கபாலம்.

osteocyte : எலும்பு உயிரணு; எலும்புத் திசுவணு.

osteodystrophy : எலும்பு பிறழ் வளர்ச்சி : எலும்பு இயல்பு திரிந்து வளர்தல்.

osteoenсhondroma : எலும்புக் கட்டி : ஒரு எலும்பினுள் உள்ள ஒரு உக்கிரமல்லாத எலும்பு மற்றும் குருத்தெலும்புக் கட்டி.

osteofibrochondrosarcoma : எலும்பு-திசுக்கட்டி : எலும்பு, குருத்தெலும்பு, இழைமத் திசுக்கள் ஆகியவற்றாலான ஒரு உக்கிரமான கட்டி.

osteofibroma : எலும்பு-திசு வீக்கம் : எலும்பிலும் இழைம திசுவிலும் ஏற்படும் ஒரு கட்டி.

osteoflurosis : எலும்பு கடினமாதல் : எலும்பில் ஏற்படும் மாறுதல்கள். இதில் நீண்ட காலம் ஃபுளோரைடுகளை உட்கொள்வதன் காரணமாக எலும்புக் கடினமாதல் ஏற்படும்.

osteogenesis : எலும்பு உருவாதல்; எலும்பாக்கம்; எலும்பு வளர்ச்சி.

osteography : எலும்பு வரைவு நூல்; எலும்பு விளக்கம் : எலும்பு களைப் பற்றி விளக்கம் வரைவுகள்.

osteology : எலும்பியல் : எலும்புகளைப் பற்றி ஆராயும் இயல்.

osteolysis : எலும்பு கரைதல் : நோய், தொற்றுநோய், குருதிக் குறைபாடு காரணமாக எலும்பு சிதைவுற்று கரைந்து போதல்.

osteolytic : அழிவுறுத்தும் எலும்பு; எலும்பு நசிவு : எலும்புகளில் படியும் அழிவுறுத்தும் படிவுப் பொருள்.

osteoma : எலும்புத் திசத் திரள் கட்டி; எலும்புக் கட்டி : நெருக்கமான திசுக்களில் உண்டாகும் உக்கிரமல்லாத கட்டி.

osteomalacia : எலும்பு நலிவு நோய்; எலும்பு மென்மை நோய் : வயதுவந்தவர்களுக்கு தாவர உப்பு நீக்கத்தினால் எலும்பு மென்மையடைதல், பொதுவாக வைட்டமின்-D பற்றாக்குறை, போதிய அளவு சூரிய ஒளி படாதிருத்தல் காரணமாக இது உண்டாகிறது.

osteomyelitis : நினைவெலும்பு வீக்கம்; எலும்பு மச்சை அழற்சி : எலும்பு மச்சையில் ஏற்படும் வீக்கம்.

osteon : எலும்பு அலகு : நெருக்கமாக இணைந்த எலும்புக் கட்டமைப்பின் ஓர் அடிப்படை அலகு.

osteopaenia : எலும்பு திரட்சி நலிவு : எலும்புப் பொருள் இணைப்பு வீதம் குறைவதால் எலும்புத் திரட்சியில் ஏற்படும் நலிவு.