பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/783

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

osteotabes

782

otolaryngology


osteotabes : எலும்பு மச்சை உயிரணு அழிவு : குழந்தைகளின் எலும்பு மச்சையிலுள்ள உயிரணுக்கள் அழிந்து போதல்'

osteotome : எலும்பு உளி; எலும்பு வெட்டி : எலும்பினை வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு கருவி. இது உளி போன்றது ஆனால் இதன் இரு வெட்டு முனைகளும் சாய்வாக இருக்கும்.

osteotomy : எலும்பு வெட்டு; எலும்புப் பகுப்பு : எலும்பினைப் பகுத்து, இருமுனைகளும் பொருந்துமாறு மறுபடியும் இணைத்தல்.

ostomy : திறப்பு வாயில் : 'புதிய திறப்பு வாயில்' என்பதைக் குறிக்கும் ஒரு பின்னொட்டுச் சொல். சிறு நீர்ப்பையிலிருந்த சிறுநீர் கழிவதற்கு அல்லது இரைப்பையிலிருந்த குடல் வழியே மலங்கழிவதற்கு வசதியாக அறுவை மருத்துவம் மூலம் ஒரு திறப்புவாயில் எற்படுத்தும் நடைமுறை.

ostium : குழாய் வாயில்; குழல் ஒட்டை; துளை; துவாரம் : குழாய் வழியின் திறப்பு வாயில்.

Ostwald coefficient : ஆஸ்ட்வால்ட் குணகம் : ஒரு கரைப்பானின் ஒர் அலகு கனஅளவில் கரைகிற வாயுவின் அளவு. கரைசல் உண்டாகிற வெப்ப நிலையிலும், அழுத்தத்திலும் இது அளவிடப்படுகிறது. இந்த முறையை ரஷிய-ஜெர்மன் இயற்பியல் வேதியியல் அறிஞர் வில்ஹெல்ம் ஆஹ்ட்வால்ட் கண்டுபிடித்தார்.

otalgia : காதுவலி, காது எலும்பு வலி; செவிக்குத்து.

otitis : செவி அழற்சி : காதில் ஏற்படும் வீக்கம். வெளிச்செவிக் குழாயின் தோலில் உண்டாகும் வீக்கம்.

Othello syndrome : ஒத்தெல்லோ நோய் : உண்மைக்கு மாறாக தன் மனைவி தனக்குத் துரோகம் செய்வதாக மனதில் ஏற்படும் ஐயத்தினால் உண்டாகும் ஒரு மருட்சி நோய். இது பெரும்பாலும் ஆண்களையே பாதிக்கிறது. பொதுவாக இதற்கு முந்திய உளவியல் நோய் அறிகுறிகள் எதுவும் காணப்படுவதில்லை.

otic : செவிசார்.'

otitis, external : புறச் செவியழற்சி.

otitis, internal : அகச் செவியழற்சி.

otitis, media : நடுச்செவியழற்சி.

otoencephalitis : மூளை அழற்சி : மூளையில் ஏற்படும் வீக்கம், வீக்கமடைந்த நடுக்காதிலிருந்து ஒரு நீட்சிபோல் இது ஏற்படும்.

otolaryngology : காது;மூக்கு; தொண்டை நோயியல்; செவி மிடற்றியல் : காது தொண்டை அமைப்பு, செயற்பணி நோய்கள்