பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/784

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

otoliths

783

Ouch-Ouch...


பற்றி ஆராயும் அறிவியல் காது. தொண்டை தனித்தனி இயல்களாகவும் உள்ளன.

otoliths : காதுச் சுண்ணகப் படிவு; செவிக்கல் : உள்காதின் திருக்கு மறுக்கான துளைச் சவ்வில் நுண்ணிய சுண்ணக நீற்றுப் பொருள் படிதல்.

otologist : காது மருத்துவர்; செவியியலார் : காது மருத்துவ இயல் வல்லுநர்.

otology : செவிநோயியல்; செவியியல் : காதின் அமைப்பு; அதன் பணிகள், அதில் ஏற்படும் நோய்கள் பற்றி ஆராயும் அறிவியல்.

otomycosis : புறச்செவி பூஞ்சண நோய்; செவிப்பூசண நோய் : புறச்செவி இடுக்கில் உண்டாகும் பூஞ்சன நோய்.

otopalato digital syndrome : காது-அண்ணம்-விரல் நோய் : மண்டையோடு-முகத்திரிபு, உடல் குறுக்கம், குட்டை உருவம் ஆகிய ஏற்படும் x-தொடர் புடைய கோளாறு.

otorhinolaryngology : காது-மூக்கு-தொண்டையியல்; செவி நாசி மிடற்றியல் : காது, மூக்கு தொண்டை ஆகியவற்றின் அமைப்பு, அவற்றின் பணிகள் அவற்றில் உண்டாகும் நோய் பற்றி ஆராயும் அறிவியல் இவை ஒவ்வொன்றும் தனித்தனி இயலாகவும் இயங்குகிறது.

otorrhoea : காதுச்சீழ்; செவி ஒழுக்கு : புறச்செவி இடுக்கிலிருந்து வெளியாகும் சீழ்.

otosclerosis : காது எலும்பு திண்மை; செவிக் கடினம் : காது எலும்பு திடமாதல்; புது எலும்பு உருவாகி படிப்படியாகச் செவிட்டுத்தன்மை உண் டாதல்.

otoscope : செவி ஆய்வுக் கருவி; செவி காட்டி : உள் காதினைப் பரிசோதனை செய்வதற்குரிய சாதனம், செவிப்புலன் வாயிலாக உடல் பரிசோதனை செய்வதற்கான கருவி; நாடியறி கருவி.

otoscopy : உட்செவி ஆய்வு : புறக்கேட்புக் குழாய், செவிப்பறைச் சவ்வு ஆகியவற்றிலுள்ள ஆழமான பகுதியை, தலைக்கண்ணாடி, காது உட் குழிகாட்டு கருவி மூலமாக நன்கு ஒளிபாய்ச்சி ஆராய்தல்.

ototoxic : காதுக்கு நச்சு; செவிக்கு நச்சு : காதில் நச்சுவினை நிகழ்தல்.

ouabaine : உவாபின் : நெஞ்சுப்பை கிளைக்கோசைட், டி ஜாக் கினைப்போல், இதயத்தை உறுதிப்படுத்தும் விளைவுடையது.

Ouch-Ouch disease : ஊச்-ஊச் நோய் : சிறுநீரக எலும்புப் பிறழ்வு வளர்ச்சியின் ஒரு வடிவம். இதில் எலும்பில் வலி உண்டாகும். தொழிற்சாலை மாசுப்