பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/785

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Ouchterlony...

784

overdenture


பொருள்களினால் கெட்டுப் போன மீனை உட்கொள்வதால் காட்மியம் அதிகமாகத் திரள்வதன் காரணமாக ஜப்பானியப் பெண்களிடம் இந்நோய் உண்டாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

Ouchterlony double diffusion : ஊச்டெர்லோனி இரட்டைப் பரவல் : காப்பு மூலமும், தற்காப்பு மூலமும் ஒன்றையொன்றை நோக்கிப் பரவுவதற்கு அனுமதிக்கிற திண்மக்கரைசல் பரவல், சுவீடன் பாக்டீரியாவியலறிஞர் ஆர்ஜான் ஊச்டெர்லோனி பெயரால் அழைக்கப்படுகிறது.

outbreak : நோய் திடீர் பரவல் : ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு நோயின் அல்லது நோய் நிலையின் நிகழ்வுகள் திடீரென அதிகரித்தல்.

out-patient : புறநோயாளி : மருத்துவமனைக்கு வந்து சென்று மருத்துவம் பெறும் நோயாளி.

outcome : விளைபயன் : ஒரு வினையாற்றலினால் விளையும் பயன். ஒரு நோய்ச் சிகிச்சையின் முடிவில் அல்லது ஒரு நோய் செயல்முறையின் இறுதியில் ஏற்படும் நிலை.

outer : வெளிப்பக்க; புற.

outfit : கலத் தொகுதி.

outflow : வெளிப்பாய்வு : ஒரு தூண்டல் வெளிப்புறமாகப் பாய்தல்.

outlet : வடிகால் : ஒரு பொருள் வெளிச் செல்லக்கூடிய ஒரு திறப்பு வழி.

out-patient : வெளி நோயாளி.

output : விளைவளவு : செய்பொருள் ஆக்க அளவு உடலிலிருந்து இழக்கப்படும் அளவிடத்தக்க திரவங்களின் அளவு.

ova: சூல் முட்டைகள்; கரு உயிரணுக்கள்; சினை முட்டை : புது உயிராக உருவாகும் பெண் கரு உயிரணுக்கள்.

oval : முட்டை வடிவ.

ovalocytes : முட்டை வடிவ குருதியணு : சிவப்புக் குருதியணுக்களில் காணப்படும் முட்டை வடிவ உயிரணுக்கள். இது குருதிச்சோகை, தாசேமியா, பரம்பரை முட்டை வடிவ சிவப்பணுக்கள் கொண்ட நோயாளி யிடம் பழுப்பு மையங்களில் மிக அரிதாகக் காணப்படும்.

oval window : முட்டை வடிவ சன்னல் : உள்காதுக்குச் செல்லும் நடுக்காதின் சுவரில் ஏற்படும் முட்டை வடிவத்துளை.

overbite : மேற்கவிந்த பல் : கீழ் வரிசைப்பற்கள் மேல்வரிசைப் பற்கள் செங்குத்தாகப் படிந்திருத்தல்.

overdenture : பல் நீக்கம் : பல் தொகுதியை முழுவதுமாக அல்லது பகுதியாக அகற்றுதல்.