பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/795

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

paediatrics

794

Paget's disease.


மருத்துவ வல்லுநர் ; குழந்தைகளின் நோய்களைக் குணப் படுத்துவதில் வல்லுநர்.

paediatrics : குழந்தை மருத்துவம் : குழந்தைகளின் நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவமுறை.

paget.Schroetter syndrome : கழுத்துப் பட்டை நரம்புக் குருதியுறை நோய் : கழுத்துப்பட்டை எலும்புக்குக் கீழுள்ள நரம்பில் ஏற்படும் குருதியுறைவு (குருதிக் கட்டு) நோய் இளைஞர்களுக்கு வலிப்பின்போது ஏற்படுகிறது.

paget's disease : எலும்பு நலிவு நோய் (பேஜட் நோய்) : காரத் தன்மையுடைய ஃபாஸ்ஃபேட்டுகள் செரிமானப்பொருள் அதிகமாவதால், எலும்பு மிக விரை வாக உருவாகும். இதனால், உடல் உயரம் குறுகிவிடும். உறுப்புகள் திரிபடையும். தலை பருத்துவிடும். முள்ளெலும்பு (தண்டெலும்பு) நலிந்துவிடும். நரம்புக் கோளாறுகள் உண்டாகும். இந்நோயாளிகள் முக்கியமாக எலும்புக் கழலைக்கு ஆளாகிறார்கள். செவி நரம்பு பாதிக்கப்படுமானால் கேட்கும் ஆற்றல் குறைகிறது. 'கால்சிட் டோனின்' என்ற மருந்து இதற்குப் பயன்படுகிறது.

painful crisis : வலிமிகு சிக்கல்கள் : வெட்ட அரிவாளணுச் சோகையில் தோன்றும் தீவிர ஆபத்தான நிலைகளில் ஒன்று. அரிவாளனுக்கள் சிதைந்து, தந்துகிகளில் குருதித் தேக்கத்தால் பகுதியழிவு நேர்தல். இதனை தீவிர தசையெலும்பு வலி, வேற்றிட உறுப்பு வலி, இரத்தக்கோழை, சிறுநீரில் இரத்தம், இரத்தக் கசிவால் கரு மலம், நரம்புமண்டல நோய்க் குறிகள் தோன்றுகின்றன.

painful fat syndrome : வலிமிகு கொழுப்பு நோயியம் : (வயதுக்கு வந்த) இளம் பெண்களில், கொழுவீக்கம் காரணமாக நாட்பட்ட இருகால் வீக்கமும் தொடுவலியும்.

painful red leg syndrome : வலிமிகு செங்கால் நோயியம் : தோல் வெப்பநிலை 32 சென்டி கிரேடுக்கு மேல் போவதால் மிகுஉணர் நிலையால், ஒரிட நாளவீக்கமும், எரிப்பு உணர்வும், கை, கால் உறுப்புகளின் புறப்பரப்பு சிவத்தல் போன்றவை ஏற்படுதல்.

pain receptors : வலி உணர் அரும்புகள்.

Paget's disease of the breast : மார்பக பேஜட்நோய் : உள்ளிருக்கும் மார்பக உள்நாளப் புற்றுடன் சேர்ந்து காணப்படும், மார்புக் காம்புகளின் நீர் வடியும் கரப்பான்புண் நோய் நிலை.