பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/802

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

papovaviridae

801

papulopustular


papovaviridae : பெப்போவா வைரிடா : புற்றுண்டாக்கும் ஆற்றல் அடங்கிய பெப்போவா வைரஸ்கள். பேப்பில்லோமா வைரஸ்கள், பாலியோமா வைரஸ்கள் மற்றும் சிமியன் வைரஸ் 40 (SW40) இவ்வகையில் அடங்கும்.

Pappenheimer bodies : பேப்பன் ஹீமர் மெய்மங்கள் : அமெரிக்க உயிர்வேதியியலாளர் பெயரால் அழைக்கப்படும் செவ்வணுக்களிலுள்ள சிறு இரும்புள்ள நில நிறமேற்றும் துணுக்குகள்.

paptest : புற்றநோய்ச் சோதனை : கழுத்துப் பகுதியிலுள்ள புறப் படல் உயிரணுக்களின் ஒரு திரளை எடுத்துச் சாயமேற்றி, நுண்ணோக்காடியில் பரிசோதனை செய்து, தொடக்கநிலைப் புற்றுநோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்கான சோதனை.

papaveretum : அபினிக் கலவை : 50% மார்ஃபின் அடங்கியுள்ள அபினி வெடியகக் கலப்புப் பொருள்களின் கலவை.

papaverine : பாபாவெரின் : அபினி வெடியகக் கலப்புப் பொருள்களில் சற்று முக்கியத்துவம் குறைந்த ஒரு பொருள்; இசிப்பு, ஈளை நோய், வெளிச் செல்குழாய்க் கோளாறுகள் ஆகியவற்றில் தளர்ச்சியூட்டும் மருந்தாகப் பயன்படுகிறது.

papila : காம்புக் குமிழ் சதைக் காம்பு; நுண்காம்பு; சிம்பு; முளை : காம்பு போன்ற நுண்ணிய முகிழ் போன்ற உறுப்பு.

papillitis : சதைக் காம்பு வீக்கம்; நுண்காம்பு அழற்சி : ஃபினாசிட் டின் என்ற மருந்தை அளவுக்கு மீறி உட்கொண்டால், சிறுநீரகத்தில் சதைக்காம்பு வீக்கம் ஏற்படலாம்.

papillary muscle : அடுக்குத் தசை : சிம்புத் தசைகள்.

papilloedema : கண் குமிழ் அழற்சி; வட்டு வீக்கம் : கண் குமிழில் ஏற்படும் இழைம அழற்சி. இது உள் மண்டையோட்டில் அழுத்தம் அதிகரித் திருப்பதைக் குறிக்கும்.

papilloma : கண்குமிழ் கட்டி; சிளைக்கும் கட்டி; நுண்காம்புக் கட்டி : சுரப்பியல்லாத கழுத்துப் புறப்படலப் பகுதியில் உண்டாகும் இலேசான கட்டி.

papillomatosis : தோல் கட்டி : தோலில் அல்லது சளிச்சவ்வில் ஏற்படும் உக்கிரமற்ற வளர்ச்சி. இதனை லேசர்மூலம் அகற்றலாம்.

papule : கொப்புளம்; பரு : தோலில் ஏற்படும் சிறிய வட்ட வடிவப் பரு.

papulopustular : கொப்புளம் சார்ந்த; சீழ்க்கொப்புள : கொப்புளங்கள், சீழ்க்கொப்புளங்கள் சார்ந்த.