பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/814

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

parvoviridae

813

pasteurization


parvoviridae : பார்வோ நச்சுயிர் : நோய்தொற்றிய உயிரணுக்களின் உட்கருவில் ஒரு புரி டி.என்.ஏ. இரட்டிக்கும் வைரஸ்களின் குடும்பத்தில் பார்வோ நச்சுயிர்களும் டென்சோ நச்சுயிர்களும் அடங்கும்.

parvovirus : பார்வோ நச்சுயிர் : மனிதர்களிலும் விலங்குகளிலும் நோயுண்டாக்கும் தன்மை கொண்ட அடினோ நச்சுயிருடன் தொடர்புடைய அது மாதிரியான நச்சுயிர்களின் இனம். தொற்று செம்படை, சிவப்பணு உருவாக்கக்குறை சோகை, முதிர்கரு நீர்வீக்கம் மற்றும் முதிர்கரு மரணம் ஆகியவற்றை உண்டாக்குகிறது.

pascal : பாஸ்கல் (அளவு) : ஃபிரெஞ்சு அறிவியலாளர் பிலெய்ஸ் பாஸ்கலின் பெயரிலுள்ள ஒரு ஸ்குயர் மீட்டரில் ஏற்படும் அழுத்தத்தை நியூட்டன்களில் சொல்லும் அளவு.

passive exercise : உடற்பயிற்சி மருத்துவம் : தசைவலியை திரும்பப் பெற உடற்பயிற்சி மருத்துவம். உடலின் பிறதசைகளைக் கொண்டு அல்லது ஒரு கருவி அல்லது மருத்துவரால் அல்லது உதவியாளரால் செய்யப் படுவது.

passive movement : தானியக்க இயக்கம் தன்வினைச் செயல் : (நம் காலை பிறர் நகர்த்துவது போன்று).

passive smoking : பிறர்புகை பிடித்தல் : பிறர் புகைக்கும் சிகரெட் அல்லது பிடியிலிருந்து வெளிப்படும் புகையை உள்ளிழுத்தல். அது மூச்சுப் பாதை கோளாறுகள், புற்று நோய் உட்பட உண்டாகும் ஆபத்தை அதிகரிக்கிறது.

pasteurella : பாஸ்ச்சுரெல்லா நச்சுயிர் : பாஸ்ச்சுரெல்லாசியே குடும்பத்தைச் சேர்ந்த கிராம் சாயம் ஏற்காத நோய்க்கிருமியினம் ஃபிரெஞ்சு வேதியியலார் மற்றும் நுண்ணுயிரியாளரான லூயி பாஸ்டியர் பெயரால் அழைக்கப்படும் பாஸ்ச்சுரெல் லாமல்டோசிடா இதிலடங்கும்.

pasteurism : ஊசி மருந்து மருத்துவம் : அடுத்தடுத்து ஊசிகுத்தி மருந்தேற்றுவதன் மூலம் நீர் வெறுப்பு நோய்கள் வராமல் தடுக்கும் அல்லது குணப் படுத்தும் முறை.

pasteurellosis : பாஸ்ச்சுரெல்லா தொற்று : பாஸ்ச்களுல்லா இனத்தைச் சேர்ந்த கிருமிகளால் தொற்று.

pasteurization : வெப்பத்தூய்மை; காய்ச்சித் தூய்மையாக்கல் : திரவப் பொருட்களை குறிப்பாகப் பால் போன்றவற்றைக் சூடாக்குவதன் மூலம் அதில்