பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/826

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

periarthritis

825

pericholecystitis


periarthritis : தமனிப்புறத் திசு அழற்சி; தோள் இறுக்கம்; மூட்டுச் சுற்றழற்சி; தமனிச் சுற்றழற்சி : ஒரு தமனியைச் சூழ்ந்துள்ள திசு ஆகியவற்றின் புற உறையில் ஏற்படும் வீக்கம்.

periarticular : மூட்டுச் சூழ்வ்த; மூட்டுச் சுற்று : ஒரு மூட்டினைச் சுற்றியுள்ள.

peribronchiolitis : மூச்சு நுண்குழல் சுற்றுத்திசுவழற்சி : மூச்சு நுண்குழலைச் சுற்றியுள்ள திசுக்களின் அழற்சி.

peribronchitis : மூச்சுக்குழல் சுற்று அழற்சி : மூச்சுக்குழலைச் சுற்றியுள்ள திசு அழற்சி.

pericardiectomy : குலையுறை அறுவை; இதயச் சுற்றெடுப்பு : நெஞ்சுப்பையை மூடிக்கொண்டு இருக்கும் குலையுறை என்னும் சவ்வாகிய இதய வெளியுறையை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல். கடுமையான குலையுறை வீக்கத்தின்போது இவ்வாறு செய்யப்படுகிறது.

pericardiolysis : இதயச்சுற்று திசுப்பிரிப்பு : இதயச் சுற்றுறையின் சுவர்ப்படலத்துக்கும் உள்ளுறுப்புப் படலத்துக்கும் இடையுள்ள ஒட்டுத் திசுக்களை நீக்குதல்.

pericardiocentesis : குலையுறை நீர்வடிப்பு : குலையுறை ஊனீர்ப்பை சுரப்பு நீரை உறிஞ்சு குழாய் மூலம் வெளிப்படுத்தல்.

pericarditis : குலையுறை அழற்சி; இதய வெளியுறை அழற்சி; இதயச் சுற்றுப்பை அழற்சி; இதய உறை அழற்சி : நெஞ்சுப்பையை முடிக் கொண்டு இருக்கும் சவ்வின் வீக்கம்.

pericardium : இதய வெளியுறை; இதயச் சுற்று; இதய உறை : நெஞ்சுப்பையை முடியிருக்கும் இரட்டைச் சவ்வுப்பை குலையுறை இதயத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் படலம் உட்கிடப்புறுப்புப் படலம் எனப்படும்.

pericardiophrenic : இதயச்சுற்றுறை இடைத்திரை சார்ந்த : இடைத்திரை மற்றும் இதயச் சுற்றுரை சார்ந்த.

pericardiostomy : இதயச் சுற்றுறைத் துளையிடல் : இதயச் சுற்றுறையில் துளை ஒன்று உருவாக்குதல்.

perichołangitis : பித்தநாள சுற்றுத் திசுவழற்சி : பித்தநாளங்களைச் சுற்றியுள்ள திசுக்கள் அழற்சி.

pericholecystitis : பித்தப்பை சுற்றத் திசுவழற்சி : பித்தப்பையைச் சுற்றியுள்ள திசுக்களின் அழற்சி.