பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/825

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

per continuum

824

periarteritis


per continuum : தொடர்ச்சியாக : ஒரு தொற்று அல்லது புற்று நிலை, ஒரு பகுதியிலிருந்து அடுத்துள்ள பக்கத்துக்கு பரவுவது போல்.

percorten : பெர்க்கார்ட்டென் : டியாக்கிகார்ட்டோன் என்ற மருந்தின் வாணிகப் பெயர்.

percuss : தட்டியறிதல்.

percussion : தட்டுச்சோதனை; தட்டியுணர்தல்; தட்டல்; தட்டாய்தல்; தட்டுகை : நோய்த்தன்மையை பொதுவாக இடது கைவிரல் ஒன்றை நோயாளியின் தோலில் வைத்து, வலதுகையின் நடுவிரலால் இடது கைவிரல்மீது தட்டப்படுகிறது. அப்போது எழும் ஒசையின் தன்மையை ஊன்றிக்கேட்டல்.

percussor : ஊடுதட்டி தட்டுகருவி : தட்டிப் பார்த்து நோயறிவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு ரப்பர் தலையுடைய சுத்தியைக் கொண்ட அமைப்பு.

percutaneous : தோலினூடே; தோல் வழி : தோலின் ஊடாகச் செயலாற்றுகிற.

perforation : துளையிடுதல்; துளைவிடல்; துளைத்தல்; துளை : இரைப்பை அல்லது குடற் சுவரின் தசை நார் சவ்வில் துளையிடுதல் அவசர அறுவை மருத்துவத்தின் போது இவ்வாறு செய்யப்படுகிறது. குடுவைபோல் இருக்கும் உறுப்புச் சுவற்றில் துளையிடலாம்.

perforating ulcer : துளைப்புண்.

perfusion : நீர்மம் ஊடுசெல்தல் : 1. ஒரு உறுப்பு அல்லது திசுவின் நாளப்படுகை ஊடாக குருதி அல்லது வேறு நீர்மம் செல்லுதல் 2 ஒரு நீர்மத்தைக் கொட்டல் 3. ஒரு தமனிக்குள் ஊசி மூலம் ஊட்டப் பொருட் களை ஒரு உறுப்புக்குள் செலுத்துதல்.

perhexilline : பெர்ஹெக்சிலின் : நெஞ்சுவலியைத் தணிக்கும் மருந்து, நெஞ்சுப்பைக் குருதி நாள விரிவகற்சி மருந்து.

periadenitis : சுரப்பித் திசு அழற்சி : சுரப்பிகளைச் சுற்றியுள்ள மென் திசுக்களில் ஏற்படும் வீக்கம். இது கழுத்துத் தடிப்பினை உண்டாக்குகிறது.

periarterial : தமனி சூழ்ந்த; தமனிச்சுற்று : இதயத்திலிருந்து குருதிகொண்டு செல்லும் நாளமாகிய ஒரு தமனியைச் சுற்றியுள்ள.

periarteritis : தமனிச் சுற்றுத்திசுவழற்சி : ஒரு தமனியின் வெளி யுறையின் அழற்சி.