பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/832

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

peristalsis

831

peritonitis


peristalsis : வயிற்றுச் தசை இயக்கம்; குடல் அலைவு; குடல் தசை அலைவு; அலைவியக்கம் : குடலிலுள்ள பொருள்கள் வயிறு நெடுகிலும் நகர்ந்து செல்லும் வகையில் குடலில் ஏற்படும் அசைவியக்கம் ஒரு தசைத் தளர்வு அலையைத் தொடர்ந்து இந்த அசைவு அலைவு தோன்றும். உணவுச் சாரம் எளிதில் செல்வதற்கு இசைவாக உணர்வற்ற வட்டாகாரமான தன்னியக்கத் தசைச் சுருக்க அலைகள் உண்டாகும்.

peritectomy : மரைபடல நீக்கம் : மரைபடலத்தை சரிசெய்வதற்காக, பளிங்குப்படலத்தைச் சுற்றியுள்ள விழிவெண்(யிணைப்) படலம் பகுதியை அறுத்து நீக்குதல்.

peritendineum : தசைநாண் உறை : தசைநாண் இழைகளுக்கிடையே நீளும், தசை நாண்களை சூழ்ந்துள்ள நாணிழை உறைகளில் ஒன்று.

perithyroiditis : தைராயிடு சுற்றழச்சி : தைராயிடு சுரப்பியைச் சூழ்ந்துள்ள உறை அல்லது திசுக்களின் அழற்சி.

peritomy : இமையிணைப் படல அறுவை; சுற்று வெட்டு : கண்ணின் கருவிழிப் படலம் சுருங்கிவிடாமல் தடுக்க கருவிழிப் படலத்தின் விளிம்பிலுள்ள இமையிணைப் படலத்தின் ஒரு பகுதியை வெட்டியெடுத்தல்.

peritoneum : வயிற்று உறுப்பு உறை (வபை); உதர உறை; வயிற்றுள்ளுறை : அடிவயிற்று உட்பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச்சவ்வுப்பை.

peritoneoscope : வயிற்றுக்குழிவறை நோக்கி : ஒரு முனையில் ஒளியையும் மறுமுனையில் பார்வை வில்லையையும் கொண்ட ஒரு மெல்லிய நீளமான அக நோக்கி, வயிற்றுச் சுவரில் ஒரு சிறுகீறல் செய்வதன் மூலம் வயிற்றுக் குழிவறையைப் பார்வையிட உதவி செய்கிறது.

peritoneoscopy : வயிற்றுக்குழிவறை நோக்கல் : வயிற்றுச் சுவர் ஊடாக ஒரு வயிற்றுக் குழிவறை நோக்கிக் கொண்டு வயிற்று உள்ளுறைக் குழிவறைக்குள் அடங்கிய உறுப்புகளைப் பரிசோதித்தல்.

peritoneotomy : வயிற்றுள்ளுறை வெட்டு : வயிற்று உள்ளுறையை அறுத்தல்.

peritoneovenous : வயிற்றுள்ளுறைச் சிரைய : வயிற்றுள்ளுறைக் குழிவரைக்கும் சிரை மண்டலத்துக்குமுள்ள இணைத்தொடர்பு.

peritonitis : வபை அழற்சி; வயிற்றறை உறை அழற்சி; உதரப் பையுறை அழற்சி : வயிற்று உறுப்பு உறையில் (வபை) ஏற்படும் வீக்கம்.