உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/831

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

periotic

830

perisplenitis


periotic : செவிச்சுற்று : 1. செவியை, முக்கியமாக உட்செவியைச் சுற்றியமைந்துள்ள, 2. பொட்டெலும்பின் முகையுருப் பகுதி மற்றும் பொறைப் பகுதிகள்.

peripartum : பிறப்புக் காலம் : குழந்தை பிறக்கும் நேரம். இதனைப் 'பேறுகாலம்' என்பர். periphacitis : விழிவில்லைழியுறையழற்சி : கண்ஒளிவில்லை மூடி யுள்ள உறையின் அழற்சி.

peripheral : புற உறுப்புகள்; புற; புறத்திய; வெளிப்புற : ஒர் உறுப்பின் அல்லது உடலின் புற உறுப்புகள் சார்ந்த.

peripheral nervous system : வெளிநரம்பு மண்டலம்; புற நரம்பு மண்டலம்.

peripheral polyneuritis : புற நரம்பு சுழற்சி.

peripheral tissue : புறத்திசு.

periphery : புறப் பரப்பு, புற எல்லை : 1. ஒரு உடற்பரப்பின் வெளிப்பகுதி. 2 மையப்பகுதியிலிருந்து செல்லும் வழிப்பாதை.

periphlebitis : சிரைச்சுற்றழற்சி : ஒரு சிரையைச் சுற்றியுள்ள திசுக்கள் அல்லது சிரையின் வெளியுறையழற்சி.

periportal : கல்லீரல் சூழ்ந்த : கல்லீரல் சிரையைச் சுற்றியுள்ள.

periproctitis : குதவாய் அழற்சி; மலக்குடல் வாய் அழற்சி; குதச் சுற்றழற்சி : மலக்குடலையும், குதவாயையும் சுற்றி ஏற்படும் வீக்கம்.

perirenai : சிறுநீரகம் சூழ்ந்த; சிறுநீரகத்தைச் சுற்றி; சிறுநீரகப் புறம் : சிறுநீரகத்தைச் சுற்றியுள்ள.

perisalpingitis : கருப்பைக் குழற்சுற்றழற்சி : ஃபெல்லோப்பியன் (கருப்பைக்) குழலைச் சுற்றியுள்ள திசுக்களின் அழற்சி.

perisigmoiditis : வளைகுடலுறை அழற்சி : பெருங்குடலின் வளைவு மடக்கத்தைச் சுற்றியுள்ள, வயிற்றுக் குழியுறை அழற்சி.

perisinusitis : சிரைப்பை திசு அழற்சி : ஒரு பைக்குழி குறிப்பாக மூட்டு உறையின் சிரைப்பையைச் சுற்றியுள்ள திசுக்களின் அழற்சி.

perispermatitis : விந்துவடச் சுற்றழற்சி : விந்துவடத்தைச் சுற்றியுள்ள திசுக்களின் அழற்சி.

perisplanchnitis : உள்ளுறுப்புச் சுற்றழற்சி : உள்ளுறுப்புக்களைச் சுற்றியுள்ள திசுக்களின் அழற்சி.

perisplenitis : மண்ணீரல் உறையழற்சி; மண்ணீரல் சுற்றழற்சி : மண்ணிரலிலும் அதையடுத்து கட்டமைவுகளிலும் உள்ள உறைகளில் ஏற்படும் வீக்கம்.