பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/837

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Petit's triangle

836

peyer's patches


பான் டார்ட்டிரேட்டும் கலந்த ஒரு தயாரிப்பின் வணிகப் பெயர். இது மயக்கத்தை எதிர்க்கக் கூடியது. இது உணர்ச்சியின்மையைப் பாதிக்காமல் மூச்சோட்டத் தாழ்வினைக் குறைக்கிறது.

Petit's triangle : பெட்டிட் முக்கோணம் : ஃபிரெஞ்சு அறுவை மருத்துவர் பெயரால் அழைக்கப்படும் முக்கோணப் பரப்பில் எல்லைகளாக புடை முகடும், முதுகுப்பரப்புத் தசையும் வெளிக்கோணத் தசையும் உள்ளன. இவ்விடைவெளி வழியாக முதுகுத்தண்டின் சீழ்க் கட்டி தோலுக்குள் துருத்தி நிற்கும்.

petroleum jelly : பெட்ரோலியம் : களிம்புகளில் பயன்படுத்துவதற்கான பெட்ரோலியத்திலிருந்து பெறப்படும் ஹைட்ரோகார் பன்களின் கூட்டு கொண்ட கூழ்மப்பொருள்.

petromastoid : பொறைமுகையுரு : பொட்டெலும்பின் முகை யுருத்துருத்தம் மற்றும் பொறைப் பகுதி சார்ந்த.

petrooccipital : பொறைப்பிடரி சால் : பொட்டெலும்பின் பொறைப் பகுதி மற்றும் பிடரி எலும்புடன் தொடர்புடைய.

petrosal : பொறைப்பகுதி : பொட்டெலும்பின் பொறைப் பகுதியுடன் தொடர்புடைய.

petrositis : பொறையழற்சி : பொட்டெலும்பின் பொறைப் பகுதியழற்சி.

petrosphenoid : பொறை சூப்பு : ஆப்பெலும்புக்கும் பொட்டெலும்பின் பொறைப் பகுதிக்கும் தொடர்புடைய.

petrosquamous : பொறைச் செதிளுரு : பொட்டெலும்பின் செதிள்பகுதி மற்றும் பொறைப் பகுதியுடன் தொடர்புடைய.

petrous : பாறை போன்ற; பொட்டெலும்பு சார்ந்த : கல்போல் மிகவும் கடினமான பொட்டெலும்புப் பகுதி சார்ந்த.

Peutz-Jeghers syndrome : பியுட்ஸ்-ஜெகெர் நோயியம் : டச்சு மருத்துவர் ஜோஹேன்னெஸ் பியுட்ஸ் மற்றும் அமெரிக்க மருத்துவர் ஹெ ரோல்டுஜெகர்ஸ் இருவர் பெயரால் அழைக்கப்படும் நோய். இதில் வாயைச் சுற்றிலும் நிறப்புள்ளிகளும், பிறகு இடைச்சிறு குடல் சவ்வுக் கட்டிகளும் உள்ளன.

peyer's patches : திரள் நிணநீர்க் குருணைகள்; பேயர் திட்டு : சிறுகுடலில் நிணநீர்த் திசுக்களின் தட்டையான பட்டைகள். இது முக்கியமாக பின் சிறுகுடலில் காணப்படும். இது, குடற் காய்ச்சல் (டைஃபாய்டு)