பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/843

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

phenobarbitone

842

pheritolamine


களில் பெருமளவு பயன்படுத்தப் படுகிறது.

phenobarbitone : ஃபெனாபார் பிட்டோன் : காக்காய் வலிப்பு நோய்க்குக் கொடுக்கப்படும் பார்பிட்டுரேட்டு என்ற மருந்து. இது நீண்ட நேரம் வேலை செய்யக்கூடியது.

phenocopy : ஃபெனோகாப்பி : ஒரு குறிப்பிட்ட மரபணுவின் காரணமான குணத்தை மிகவும் ஒத்துள்ள ஒரு தனிப்பண்பு தோன்றுதல். ஆனால் உண்மையில் அது சூழல் அல்லது பிற காரண விளைவுகளின் காரணமாக தோன்றுவதாகும்.

phenol : ஃபீனால்; ஃபீனைல் ஆல்கஹால் : தொற்று நீக்கியாகவும் கிருமி நீக்கியாகவும் பயன்படும் ஃபெனிக் அல்லது கார்பாலிக் அமிலம். அதன் 3-4 விழுக்காடு கரைசலை உட்கொண்டால் நரம்புகளை பாதிக்கும்.

phenolic disinfectants : ஃபெனால் தொற்று நீக்கிகள் : தொற்று நீக்கி மருந்தாகப் பயன்படும். ஃபெனால் வழிப் பொருள்கள் இதனைத் தோலும், நுரையீரல்களும் உறிஞ்சிக் கொள்ளும். இதனால் மஞ்சட் காமாலை உணடாகலாம.

phenology : உயிரி ஆய்வியல்.

phenolphthalein : ஃபெனால்ஃப்தலின் : மலமிளக்கி மருந்து.

phenothiazines : ஃபெனாத்தையாசின் : வீரியம் வாய்ந்த துயிலுரட்டும் மருந்துகள். குளோர்புரோமாசின் இந்த வகையைச் சேர்ந்தது. மன அதிர்ச்சியைக் குறைக்கும்.

phenotype : ஃபெனோ வகை : பரம்பரை மற்றும் சூழல் காரணிகளால் தீர்மானிக்கப் படும் ஒரு உயிரில் காணப்படக் கூடிய எல்லா குண நலன்களும்.

phenoxybenzamine : ஃபீனாக்ஸிபென்ஜாமின் : இரத்தக்கொதிப்பை சிகிச்சை செய்ய தரப்படும் ஆல்ஃபா ஆட்ரீனெர்ஜிக் ஏற்புத் தடைப் பொருள்.

phenoxymethylpenicillin : ஃபெனாக்சிமெத்தில் பெனிசிலின் : வாய்வழி உட்கொள்ளப்படும் பெனிசிலின் மருந்து.

Phensuximide : ஃபென்சக்ஸிமைடு : (பெடிட்மால்) சிறு வலிப்பில் பயன்படுத்தப்படும் வலிப்பெதிர்ப்பு மருந்து.

phentermine : ஃபென்டெர்மின் : பசியைக் குறைக்கும் மருந்து.

phentolamine : ஃபென்டோலாமைன் : குண்டிக்காயிலிருந்து சுரக்கும் அட்ரினலின் என்ற இயக்குநீருக்கு எதிரான பொருள்.