பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/850

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pancystitis

849

photoptometer


photodynamic therapy : ஒளி இயக்க மருத்துவம் : பொருத்தமான ஒரு அலைவரிசையிலுள்ள ஒளிபடும்போது, ஒரு ஒளிக்கூருணர்விப்பான் செறிந்த புற்றணுக்கள் அழிக்கப்படும் மருத்துவ முறை.

photoendoscope : ஒளி உள்நோக்குக் கருவி : ஒர் ஒளிப்பதிவுக் கருவியில், உள்ளுறுப்பு நோக்குக் கருவியை இணைத்து, உள்ளுறுப்புகளைப் பார்த்து ஆராய்தல்.

photogenic : ஒளியுருவாக்கம் : 1. ஒளியை உண்டாக்கும். 2 ஒளி யால் உண்டாகும்.

photolysis : ஒளிச்சிதைவு : ஒளியின் இயக்கத்தால் ஒரு வேதியக் கூட்டுப் பொருள் சிதைவுறுதல்.

photometry : ஒளி(மானி) அளவி : ஒளியின் ஆற்றலளவை அளத்தல்.

photomicrograph : ஒளிநுண்வரைபடம் : ஒரு நுண்ணோக்கியின் மூலம் ஒரு பொருளைப் பார்த்து எடுக்கப்படும் பெரிதாக்கப்பட்ட ஒளிப்படம்.

photophobia : ஒளியச்சம்; கண் கூச்சம்; ஒளி மருளியம் : கண்ணில் ஒளிபட்டால் தாங்கிக் கொள்ள முடியாத நிலை.

photoperiod : ஒளிக்கால (அளவு) : ஒவ்வொரு நாளும் ஒரு உயிரி வெளிச்சத்துக்கு ஆட்படும் கால அளவு.

photopheresis: ஒளி மருத்துவம் : தோல் நிணப்புற்றுக்கு அளிக்கப்படும் மருத்துவ முறையில் ஒரு ஒளி இயக்க வேதிப் பொருள் உடலுக்குள் செலுத்தப்பட்ட பிறகு, இரத்தத்தை வெளியிலெடுத்து, ஒரு அல்ட்ரா வயலெட் கதிர் வீச்சு மூலத்தின் வழி சுழன்ற பிறகு நோயாளிக்கு திரும்பச் செலுத்தப்படுதல்.

photophthalmia : ஒளிவழியழற்சி : பனிப் பார்வையிழப்பில் போல் கூர்மையான ஒளிபடுவதால் கண்ணில் ஏற்படும் அழல்வினை.

photopigment : ஒளி நிறமி : ஒளி முன்னிலையில் நிலைகுலையும் நிறமி.

photoprotection : ஒளிகாப்பு : மீ(ப்புற) ஊதாக்கதிரொளியால் ஏற்படும் சேதத்திலிருந்து உயிரணுக்களைக் காப்பாற்றுதல்.

photopsia : ஒளியுணர்வு : விழித்திரை உறுத்தலின்போது ஏற்படும் வெளிச்சம் அல்லது ஒளிப்பொறி அல்லது நிறம் தோன்றுவது போன்ற உணர்வு.

photopsin : ஒளிப்புரதம் : விழித்திரைக் கூம்புகளில் உள்ள (அயோடாப்சின்) நிறமியின் புரதப் பகுதி.

photoptometer : ஒளிக்காட்சி மானி : ஒரு பொருளைக் காண்பதற்குத் தேவையான மிகக் குறைந்த வெளிச்ச அளவைக் கண்டறியும் கருவி.