பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/858

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pitting

857

placenta


தழும்புக்குழி, உடம்பின் உட்பொள்ளல். குழித்தழும்பு.

pitting : குழியமைத்தல் : 1. தழும்பு காரணமாக வழக்க மாக உண்டாகும் ஒரு சிறுபள்ளம் 2 சிடைரின் துகள்கள் அல்லது ஹோவெல்-ஜாலி மெய்மங்கள் போன்ற அணுக்கூழ்ம் உள் சேர்க்கைகளை வெளியேற்றும் மண்ணிரலின் செயல். 3. நீர் வீக்கத்தின் மேல் விரலை பலமாக அழுத்தியெடுத்தபின் சிறிது நேரம் தொடர்ந்து பள்ளமாயிருத்தல்.

pituitary gland (pituitary body) : கபச்சுரப்பி; குருக்கழலை; அடி மூளைச் சுரப்பி : உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக உதவுவதாகக் கருதப்படும் தும்பற்ற முளையடிச் சுரப்பி.

pityriasis : கரணைப் பொக்குளம்; தோல் கொப்புளம்; பொடுகு உதிர்வு : தோலில் ஏற்படும் கரணைச் சொறிப் பொக்குளம், சிதல் சிதலாக உரியும் தோல் நோய்.

pityrosporum : பிட்டிரோஸ்போரம் : நொதியின் (ஈஸ்ட்) ஓர் இனம்.

placenta : நச்சுக்கொடி; கருக்கொடி; பனிக்குடம் : கருவுற்ற மூன்று மாதங்களில் கருப்பையின் உட்சுவருடன் இணைந்தவாறு ஒரு செல்குழாய் போன்ற கட்டமைப்பு உருவாகிறது. இதன் வழியாகக் கருப்பைக் குழந்தைக்கு ஊட்டச்சத்தும், ஆக்சிஜனும் செல்கிறது. இதன் வழியாகவே கருக்குழந்தை கழிவுப் பொருள்களை வெளி