பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/871

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pneumoventri.

870

point


வாயு நிறைதல். இது ஈளை நோயினால் (ஆஸ்துமா) உண்டாகலாம்.

pneumoventriculography : வளியமூளை நீரறைவரைபதிவு : மூளை நீரறைகளுக்குள் காற்றைச் செலுத்தி எக்ஸ்ரே படப் பதிவு.

PNI : உளவியல் நரம்பு நோய்த் தடுப்பியல்.

pock : பெரியம்மைக் கொப்புளம்.

pock monk : அம்மைத்தழும்பு.

pox : அம்மை; பெரியம்மை.

Poculum Diogenes : குழிய உள்ளங்கை : கைத்தசைகள் சுருங்குவதால் உள்ளங்கை கோப்பை போல குழிவு உண்டாதல், கிரேக்க தத்துவஞானி டயோஜீன்ஸ் பெயரைப் பெற்றுள்ளது.

podalic : காலடி : 1. காலடி தொடர்பான 2 குழந்தை பிறப்பின் போது காலடியை பயன்படுத்துவது, குறிப்பாக காலடித் திசை திருப்பல்.

podencephalus : மூளை கருக்குழந்தை : துருத்திய மூளையின் பெரும்பகுதி மண்டையோட்டுக்கு வெளியிலிருக்கும் உருக்குறையுடைய முதிர்கரு.

podiatrist : காலடி மருத்துவர் : காலடிகளின் நோய்களுக்கு மருத்துவம் செய்வதில் சிறப்புத் தகுதி பெற்ற மருத்துவர்.

podocyte : அடித்தட்டணு :சிறு நீரகத் திரணையின் பெளமன் உறையின் உள்வரியாயமைந்து உள்ள பல அடித்தகடுகளைக் கொண்ட மேற்றொலி அணுத் திரணை வடிப்பு வெளியேற இவ்வடுக்கில் இடைவெளிகள் உள்ளன.

pododynamometer : கால் தசை திறனளவி : கால் மற்றும் காலடித் தசைகளின் வலுவை சோதிக்கும் கருவி.

podophyllum : போடோஃபில்லம் : சில காம்புப் புற்றுகளின் மேல் தடவி மருத்துவம் செய்ய உதவும் மஞ்சள் குங்கிலியத்தின் உலர்ந்த வேர்களும் வேர்த் தண்டுகளும்.

poikiloderma : மிகைநிறத்தோல் : மெலிந்து நிறமி மிகுந்து பல வண்ணப் புள்ளிகளுடன் தோற்றமளிக்கும் தோல்.

poikilotherm : சூழல் வெப்ப பிராணி : சூழல் வெப்பத்திற்கேற்ப உடல் வெப்ப நிலை மாறும் குளிர் இரத்தப் பிராணி.

point : புள்ளி : 1. ஒரிடம் அல்லது சிற்றிடம். 2. ஒரு பொருளின் கூர்முனை 3 உடையப்போகும் சீழ்க்கட்டியின் மேல்முனை. 4. இட, நேர அளவின் நிலை.