பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/872

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

poise

87

polarised


poise : சமநிலை : 1. ஒரு நீர்மத்தின் பாகுநிலை (குழைம நிலை)யளவு. ஒரு விநாடிக்கு ஒரு சென்டிமீட்டருக்கு எத்தனை கிராம்கள் எனுமளவு. பிரெஞ்சு உடலியக்கவியாளர் ஜீன்பாய்சியுஸ் பெயராலமைந்தது.2 நிதானமான கருத்து அல்லது நடத்தையை கடைப்பிடித்தல்.

Poiseuille's law : பாய்சியுல்லின் விதி : ஃபிரெஞ்சு உடலியக்க வியலாளர் ஜீன்பாய்சியுல் வகுத்த விதி. சிறு குழல்களின் வழியே நீர்மங்கள் பாயும் வேகம், குழல்களின் அழுத்தம் மற்றும் ஆர அளவுக்கேற்ப மாறும். ஆனால் குழலின் நீளம், நீர்மத்தின் குழைமத்தின் அளவுக்கு நேர்எதிர் அளவில் மாறும்.

Poiseuille's space : வேகவெளி : தந்துகிச் சுவருக்கு அருகிலுள்ள வெள்ளணுக்கள் மெதுவாக நகருவதும், நடுவிலுள்ள சிவப்பணுக்கள் மிக வேகமாக நகரும் நிலை.

poison : நஞ்சு : ஒரு உயிரியை வழக்கமாக பாதிக்கும், காயப் படுத்தும் அல்லது கொல்லும் வேதிப்பொருள்.

poisoning : நஞ்சூட்டல் : நஞ்சால் விளையும் உடல் அறிகுறிகள். நஞ்சிருப்பதை அறியாததாலோ, விரும்பிச் செய்யாமலோ அல்லது விபத்தின் காரணமாக இருக்கலாம்.

poisonous : நச்சுத்தன்மைய : நஞ்சின் முதன்மைகளைக் கொண்ட.

polarimeter : ஒளிமுனைப்பாக்க மானி : ஒளி முனைப்படுதள சுழற்சி அல்லது முனைப்படும் ஒளியின் அளவை அளக்கும் கருவி.

polariscope : ஒளிமுனைநோக்கி : முனைப்பட்ட ஒளி அளக்கப் பயன்படும் கருவி.

polarity : முனை நிலை : 1. (poor கள் கொண்ட நிலை, 2. இரு துருவங்களின் நேரெதில் விளைவுகள் தென்படுதல் 3, உயிரணு உட்பொருட்கள் தொடர்புநிலை.

polarisation : முனைப்பாக்கம் : 1. முனைநிலை இருத்தல். 2. அதிர்வுகள் ஒரு தளத்தில் மட்டும் தோன்றும் ஒளிநிலை. 3. உடலில் நேர்மின் நிலையும் எதிர்மின் நிலையும் பிரிக்கப்படும் முறை. 4. தூண்டப்படக் கூடிய அணு ஒய்வு நிலையில் அனுப்படலத்தில் உள்ள மின் நிலை.

polarised : முனைப்படுத்தப்பட்ட : ஒரே நேரத்தில் நேர்மின், நிலை எதிர்மின் நிலை போன்ற ஒன்றுக்கொன்று எதிரான நிலைகள் அல்லது விளைவுகள் இருக்கும் நிலை.