பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/887

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

potter's rot

886

poxvirus


உள்ள சிம்பு எலும்பிலும் முறிவு ஏற்படுதல். முன்கால் எலும்பின் இடைச்சுத்தி எலும்பில் ஏற்படும் முறிவு.

potter's rot (potter's asthma; potter's bronchitis) : குயவர் நோய் : மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மண் தூசியினால் உண்டாகும் கொடிய மார்ச்சளி நோய்.

poudrage : பொடிபூசுதல்; பொடி தூவுதல் : ஒரு நஞ்சல்லா உறுத்தும் துளை, நுரையீரலுறையிடை வெளிக்குள் தூவி, நுரையீரலுறை ஒட்டவைத்தல்.

poultice : பத்துப் போடுதல் : ஒரு மெதுவான, ஈரமான, சூடான, கடுகு, ஆளிவிதை, சோப்பும் எண்ணையும் கலந்த கலவை மாவை வினல் அல்லது வலைத் துணியடுக்குகளுக்குள் வைத்து தோலின்மேல் பத்துப்போடுவதன் மூலம் அந்த இடத்தில் ஈரச் சூட்டு அல்லது உறுத்தலெதிர் நிலையை உண்டாக்குவது.

povidone iodine : போவைடோன் அயோடின் : அயோடினை விடுவிக்கும் ஒரு திரவம். இது, தோலிலும் சிலேட்டுமப் படலத்திலும் படும்போது அயோடின் மெல்ல மெல்ல விடுவிக்கப் படுகிறது. இதனால் இது அறுவை மருத்துவத்துக்கு முந்திய தோல் மருந்தாகவும், அலசிக் கழுவும் மருந்தாகவும் பயன்படுகிறது.

powder : தூள் : 1. நுண்ணிய தனித்தனி துகள்களின் திரட்சி 2. ஒரளவு உலர்ந்த, நுண்ணியதான பருப்பொருள். 3. அப்படிப்பட்ட தூளின் ஒரு அளவு.

power : திறன் : 1. ஆற்றல்; 2. செயல் செய்யும் இயல் திறம். 3. வேலை நடக்கும் அளவு. 4. ஒரு ஒளிவில்லையின் பெரிதாக்கிக் காட்டும் அளவு. 5. நுண்ணோக்கி, ஒரு பொருளின் விட்ட அளவை பெருக்கிக் காட்டும் மடங்கு.

poxvirus : அம்மை நச்சுயிர் : பெரியம்மை, மாட்டம்மை, பால் பரு போன்றவற்றை உண்டாக்கும் ஈரிழை டி.என்.ஏ. கொண்ட பெரிய செங்கல் வடிவ நச்சுயிர்கள்.