பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/886

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

potassium iodide

885

pott's fracture


சிறுநீர்ப் போக்கை அதிகரிக்கும் மருந்துகளை நீண்ட காலம் பயன்படுத்துவதாலும் உண்டாகலாம். குமட்டல், தசை நலிவு இதன் அறிகுறிகள். இடையிடையே மாரடைப்பும் ஏற்படக்கூடும்.

potassium iodide : பொட்டாசியம் அயோடைடு : மூச்சுக் கிளைக்குழல் அழற்சியின் போது சளியகற்றும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. குரல் வளைச் சுரப்பி வீக்கத்தைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

potassium paraamino benzoate : பொட்டாசியம் பாராமினோ ப்ென்சோயேட் : புறத்தோல் கழலைக்குப் பயன்படும் மருந்து, 3 கிராம் மாத்திரைகளை நாள் தோறும் நான்கு வேளை உணவுடன் வாய்வழியாகப் பல மாதங்கள் உட்கொள்ள வேண்டும்.

potassium perchlorate : பொட்டாசியம் பெர்க்குளோரேட் : கேடயச் சுரப்பியில் அயோடின் திரட்சியைக் கட்டுப்படுத்தும் மருந்து.

potassium permanganate : பொட்டாசியம் பெர்மாங்கனேட் : ஆற்றல்மிக்க தொற்றுத்தடை மருந்து கருஞ்சிவப்பு நிறமுடையது. மணம் அகற்றும் இயல்புடையது. காயங்களைக் கழுவும் கரைசலாகப் பயன்படுகிறது.

potency : வீரியம் : ஆற்றல்; சக்தி; வலிமை.

pott's disease : முதுகெலும்பு அழற்சி : முதுகந்தண்டு சொத்தையாதல்; முதுகந்தண்டுக் காசநோய். இதனால் முதுகெலும்பு இழைம அழுகல் ஏற்படுகிறது.

pott's fracture : கணுக்கால் மூட்டுப்பெயர்வு : கணுக்கால் மூட்டு முறிந்து இடம் பெயர்தல். கணுக்கால் மூட்டுக்கு 75 மி.மீ. மேலேயுள்ள முன்கால் எலும்பின் கீழ்முனையிலும் சிம்பு காலின் வெளிப் புறத்திலுள்ள சிம்பு எலும்பிலும் முறிவு ஏற்படுதல். முன்கால் எலும்பின் கீழ்முனையிலும் சிம்பு காலின் வெளிப்புறத்தில்