பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/894

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

prick test

893

prime


தோன்றும் அரிப்புடன் கூடிய நுண் பருக்கள்.

prick test : குத்து சோதனை : நீர்த்த ஒவ்வாமைப் பொருளை தோலின் மேல் தடவி, தொற்று நீக்கிய ஊசியைக் கொண்டு மேற்றொலிப் பரப்பில் குத்தும் சோதனை, உடனடிக் கூருணர்வை அறிய செய்யும் சோதனை.

prilocaine : பிரிலோக்கெய்ன் : ஒர் உணர்வு நீக்கிச் செயற்கை மருந்து, கோக்கைனைவிட நச்சுத்தன்மை குறைந்தது. இதன் சில தயாரிப்பு களில் செல் குழாய் இறுக்கும் பொருள்கள் அடங்கியுள்ளன.

primaquine : பிரைமாக்குவின் : முறைக்காய்ச்சல் (மலேரியா) எதிர்ப்பு மருந்து முறைக்காய்ச்சலுக்குக் காரணமான ஒட்டுயிர்க் கிருமியை நுரையீரலில் இருந்து நீக்குவதற்குப் பயன் படுத்தப்படுகிறது.

primary amputation : முதல்நிலை உறுப்புத் துண்டிப்பு : அழற்சி அல்லது வீக்கம் இடையூறாக நிகழ்வதற்கு முன்னர் செய்யப்படும் முதற்படியான உறுப்புத் துண்டிப்பு.

primary complex : முதல்நிலைக் காசநோய்; காசநோய் தொற்று நிலை : ஒருவருக்கு முதற்படியாகக் காசநோய் ஏற்படுதல், பொதுவாக இது சுவாசப்பையில் (நுரையீரல்) உண்டாகும். இந்த நிலையில் இந்நோயை பெரும்பாலும் குணப்படுத்தி விடலாம்.

primary health care : தொடக்க சுகாதாரக் கவனிப்பு; முதற்படி நல்வாழ்வு பராமரிப்பு : முதல் நிலைச் சுகாதாரக் கவனிப்பு முறை. எல்லோருக்கும் இன்றியமையாத சுகாதார வசதிகள் கிடைக்கும்படி செய்வதற்காக உலகச் சுகாதார அமைவனம் வகுத்த திட்டத்தின்படி செயற்படும் மருத்துவக் கவனிப்பு முறை.

primary immunisation : முதல்முறை நோய்த்தடுப்பு.

primary sore : முதற்புண்.

primary syphilis : முதல்நிலை கிரந்தி.

primate : முதல்நிலை உயிரிகள் : மனிதன், வாலில்லாக் குரங்குகள், குரங்குகள், குரங்கினப் பாலுண்ணிகள் போன்றவற்றில் ஒன்று.

prime : முதல்நிலை : 1. கால வரிசையில் முதலாவது, முக்கியத்துவ வரிசையில் முதலாவது, 2. முழு நலம் மற்றும் பலம். 3. ஒரு மருந்தை அல்லது வேறொரு மருந்தைப் பெரிய அளவில் கொடுப்பதற்கு முன் செய்யப்படும் ஆரம்ப சோதனை.